Share on Social Media

துபாய்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம், அமித் பங்கல் உள்ளிட்டோர் பதக்கம் வென்று சாதிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் நடக்க இருந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர், ‘கொரோனா’ பரவல் காரணமாக துபாயில் இன்று துவங்குகிறது. இதில் இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், கஜகஸ்தான், தென் கொரியா, கிர்கிஸ்தான், பிலிப்பைன்ஸ், உஸ்பெகிஸ்தான் நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 9 வீரர்கள், 10 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் பங்கேற்கின்றனர். ‘கொரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய வீரர் வினோத் தன்வர் (49 கி.கி.,) கடைசி நேரத்தில் விலகினார்.

பெண்கள் பிரிவில், ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற மேரி கோம் (51 கி.கி.,), சிம்ரன்ஜித் கவுர் (60 கி.கி.,), லவ்லினா (69 கி.கி.,), பூஜா ராணி (75 கி.கி.,) பதக்கம் வெல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்கம் (2003, 2005, 2020, 2012, 2017), ஒரு வெள்ளி (2008) என, 6 பதக்கம் வென்றுள்ளார்.

பெண்களுக்கான மற்ற எடைப்பிரிவு போட்டிகளில் இந்தியாவின் மோனிகா (48 கி.கி.,), சாக் ஷி (54 கி.கி.,), ஜாஸ்மின் (57 கி.கி.,), சவீட்டி (81 கி.கி.,), அனுபமா (+81 கி.கி.,), லால்பூட்சைஹி (64 கி.கி.,) பங்கேற்கின்றனர்.

ஆண்கள் பிரிவில் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற அமித் பங்கல் (52 கி.கி.,), விகாஸ் கிருஷ்ணன் (69 கி.கி.,), ஆஷிஸ் குமார் (75 கி.கி.,) ஆகியோருடன் ஷிவா தபா (64 கி.கி.,), சுமித் சங்வான் (81 கி.கி.,), சஞ்ஜீத் (91 கி.கி.,), நரேந்தர் (+91 கி.கி.,), முகமது ஹுசாமுதீன் (56 கி.கி.,) பங்கேற்கின்றனர்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *