Share on Social Media


அதேபோல, மாநகராட்சிக்குச் சொந்தமான ஏக்கர் கணக்கிலான இடங்களைச் சொற்ப வாடகைக்கு எடுத்து விதிமுறைகளை மீறிச் சம்பாதித்து வந்த தனி நபர்களிடமிருந்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்டிருக்கிறார். மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, திருவள்ளுவர் பேருந்து நிலையத்தின் எதிரே சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினார். அப்போது, தஞ்சாவூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம் கடைக்குள் அமர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்.

இந்த நிலையில், எம்.எல்.ஏ பாணியில் அவரின் ஆதரவாளர்களும் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆளும் தி.மு.க அரசின் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக தி.மு.க-வினரே எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் செய்து கொண்டிருப்பது தஞ்சை தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

போராட்டம்

போராட்டம்

இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டோம், “அண்ணாசிலையிலிருந்து பனகல் கட்டடம் வரை சாலையோரத்தில் செல்போன், துணிக்கடை உள்ளிட்ட பல கடைகள் இருக்கின்றன. மழை நீர் வடிகால் வாய்க்காலுக்கு மேல் ஆக்கிரமிப்பிலிருந்த கடைகளை அகற்றுவதற்காக மாநகராட்சி அலுவலர்கள் சென்றனர். அப்போது கடை வைத்திருப்பவர்களும், எம்.எல்.ஏ நீலமேகத்தின் ஆதரவாளர்களும், தி.மு.க தஞ்சை மாநகர துணை செயலாளர் நீலகண்டன் தலைமையில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *