Share on Social Media


தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் நெல்லை தொகுதியில் உள்ள பூத் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்தார். முன்னதாக 400 பேர் இரு சக்கர வாகனத்தில் பங்கேற்ற பேரணியை தச்சநல்லூரில் தொடங்கி வைத்தார். பின்னர், நெல்லை சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, நெல்லை சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் காரியாலயத்தை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நெல்லையில் இருசக்கர வாகன பேரணி

நெல்லையில் இருசக்கர வாகன பேரணி

கூட்டணிக்கான தொகுதி ஒதுக்கீடு முடிவடையவிலை. யாருக்கு எந்தத் தொகுதி ஒதுக்கப்படும் என்பதற்கான எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், பா.ஜ.க-வினர் தாங்களாகவே நெல்லை தொகுதியைக் குறிவைத்து தேர்தல் அலுவலகம் திறக்க அ.தி.மு.க நிர்வாகிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால், கடைசி நேரத்தில் தேர்தல் காரியாலயம் திறப்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *