Share on Social Media


எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்னையிலும், வளர்ச்சிக்கான ஒரு புதிய வாய்ப்பினை பார்ப்பவரே நல்ல தலைவர். அந்த வகையில், கொரோனா நோய் தொற்றை தமிழகத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்ற, மாநிலத்திலேயே மருந்து உற்பத்திக்கு முயற்சிக்கும் முதல்வருக்கு பாராட்டுகள்.
– தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்

‘அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த இ.பி.எஸ்., தான் நீங்கள் சொல்வதற்கான உதாரண புருஷர்… எங்கும் எதிர்ப்பு, எதற்கும் எதிர்ப்பை சந்தித்தவர், எதிர்நீச்சல் போட்டு, கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தார்… அப்போது நீங்கள் பிடில் வாசித்துக் கொண்டிருந்தீர்கள் போலிருக்கு…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.

கொரோனா நிவாரணம் முதல் தவணையாக, 2,000 ரூபாய், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. அதில், மாற்றுத்திறனாளிகள் இடம் பெற்றுள்ள குடும்பங்களுக்கு 25 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும்.
– தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்சிராணி

‘மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த நேரத்தில் இன்னும் நிறைய செய்ய வேண்டும்…’ என, ஆதரவு தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்சிராணி அறிக்கை.

தமிழகத்தில் நகரங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் கொரோனா பெருந்தொற்று தினசரி வேகமாக பரவி, அதிகமான கிராமப்புற மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கிராமப்புறங்களில் நடமாடும் மருத்துவமனைகளை துவக்கி, நோயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
– மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்

‘நகரங்களிலும் நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டியது அவசியம் தான். நோய் தொற்று அதிகம் காணப்படும் இடங்களில் சிகிச்சை மையங்களை துவக்க வேண்டும்…’ எனக் கூறத் துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.

கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கின்றன. அதுபோல, அரசின் பல நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் கூட்டுறவு துறையினரையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.
– கூட்டுறவு துறை ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன்

‘எல்லா துறையினரையும் அவ்வாறு அறிவித்து விட்டால், சலுகைகள் யாருக்கும் கிடைக்காமல் போய் விடுமே…’ என, நினைவுபடுத்த தோன்றும் வகையில், கூட்டுறவு துறை ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் அறிக்கை.

தமிழக கல்வி அமைச்சர் மகேஷ், திருச்சி தி.மு.க., அலுவலகத்தில் எஸ்.பி., கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதுபற்றி விவாதம் ஏற்பட்டதும், பாராட்டு தெரிவிக்க அதிகாரிகள் வந்தனர் என்கிறார். உண்மையை சொல்ல வேண்டியது அதிகாரிகள் தான்.
– தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

‘யார் பதில் சொல்லி என்ன ஆகப் போகிறது. இதெல்லாம் தமிழகம் எதிர்பார்த்தது தானே…’ என, விரக்தி தெரிவிக்க தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *