Share on Social Media


இந்திய சமூகத்தில் பெண்களின் பிரச்னைகள் பெரும்பாலும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆண்கள் மட்டுமன்றி பெண்களேகூட அவர்களின் பிரச்னைகளைச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல இயலாது.

அண்மைக்காலமாக, குறிப்பாக மலையாளத் திரையுலகம் பெண்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, திரைப்படங்களை உருவாக்கி வருவது வரவேற்கப்பட வேண்டியது. இந்தப் படங்களின் வாயிலாக பெரிய அளவிலான விவாதங்களுக்கான கதவுகள் திறக்கப்படுகின்றன. இதற்கு முன் இதுபோன்ற விஷயங்களில் எந்தக் கருத்தும் இல்லாமல் இருந்த பலருக்கு புதிய ஒளி பாய்ச்சப்படுகிறது. இதனால் மிகக் குறைந்த அளவு மாற்றம் உருவானால்கூட அது மிகப் பெரிய வெற்றிதான். அப்படித்தான், `தி கிரேட் இண்டியன் கிச்சன்’, `சாரா’ஸ்’ போன்ற திரைப்படங்கள் வெளிவந்து, மொழி எல்லைகளைக் கடந்து, இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறின. அப்படி ஒரு பிரச்னையைத்தான் `ஸ்டார்’ திரைப்படமும் கையில் எடுத்திருக்கிறது.

கல்லூரிப் பேராசிரியர் ஆர்த்ரா. அவரின் கணவர், தொழிலதிபர் ராய். இவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். மிக வசதியான வாழ்க்கை.

பழைமையான நம்பிக்கைகளில் ஊறிய இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆர்த்ரா. கணவர் ராய் கிறிஸ்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து, 17 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார்கள். ராயின் முதல் மனைவிக்குப் பிறந்த மகளுடனும் ஆர்த்ராவும் குழந்தைகளும் அன்பாக இருக்கிறார்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.