Tamil News large 2644718 Tamil News Spot
Share on Social Media

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட காப்பீடு திட்டத்தில் சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு செய்யவிவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீடு தி்ட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப் படுகிறது. 2020ம் ஆண்டில் சிறப்பு பருவமாக தமிழகத்தில் நெற் பயிர் மற்றும் இதர சிறப்பு பருவ பயிர்களான மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றை பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் மாவட்டத்தில் செயல் படுத்துகிறது. இத்திட்டத்திற்கு நடப்பாண்டில் கடலுார் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் பயிருக்கு 758 வருவாய் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் விருப்பத் தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவே விருப்பத்தின் பேரில் பதிவு செய்யலாம்.

சம்பா சிறப்பு பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய வரும் 30ம் தேதியும், பிர்கா அளவில் இதர சிறப்பு பருவ பயிர்களான மக்காச்சோளம்-2ம் பருவத்திற்கு இன்று 2ம் தேதியும், பருத்தி 2ம் பருவத்திற்கு வரும் 15ம் தேதியும் பிரிமியம் செலுத்த கடைசி நாள்.பயிர் காப்பீட்டுத் தொகையில் மக்காச்சோளம் மற்றும் நெல் பயிருக்கு விவசாயிகள் 1.5 சதவீதம் மற்றும் பருத்திக்கு 5 சதவீதம் பிரிமியத் தொகையாக செலுத்த வேண்டும். அதாவது நெற்பயிருக்கு (நெல்-2ம் பருவம்) ஏக்கருக்கு 469 ரூபாயும், மக்காச்சோளம்-2ம் பருவ பயிருக்கு 297ம், பருத்தி -2 பருவ பயிருக்கு 1,074 ரூபாயும் காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும்.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது, முன்மொழி விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா மற்றும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத் தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகிய வற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.மேலும், விவரங் களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் அலுவலர்களிடம் தெரிந்து கொள்ளலாம் என வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *