Share on Social Media

புதுடில்லி: பயம் காரணமாக சிறையில் தரும் உணவுகளை சாப்பிட மறுக்கிறார் சுஷில் குமார்.

இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் 38. சக வீரர் சாகர் கொலை வழக்கில் கைதான இவருக்கு, 9 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. டில்லி மண்டோலி சிறையில் 15ம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற கைதிகளுடன் சேர்க்காமல், இவர் மட்டும் தனி அறையில் உள்ளார். 24 மணி நேரமும் கண்காணிக்க, கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதனிடையே சாகர் தாக்கப்பட்ட போது, ‘தாதா’ காலா ஜதேதி மருமகன் சோனுவும் சுஷில் குமாரால் தாக்கப்பட்டார். 

தற்போது ஜதேதியின் நண்பரான மற்றொரு ‘தாதா’ லாரன்ஸ் பிஷ்னாய், இதே மண்டோலி சிறையில் உள்ளார். ஜதேதிக்காக, லாரன்ஸ் எதுவும் செய்வார் என்பதால், சுஷில் குமார் அச்சத்தில் உள்ளார். 

அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டு, சிறிது நேரம் துாங்குகிறார். சிறையில் தரும் இரவு உணவுகளை சாப்பிட மறுக்கிறார். 

இரவில் கொஞ்சம் கூட துாங்க மறுக்கிறார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பீதியுடன் தான் காணப்படுகிறார்.

 

ஸ்கூட்டர் பெண் யார்

சாகர் சம்பவத்துக்குப் பின் தலைமறைவாக இருந்த சுஷில் குமார், தனது ‘தோழி’ ஒருவரிடம் ஸ்கூட்டரை வாங்கி பயணித்துள்ளார். இந்த வழக்கிற்கும், அந்த பெண்ணுக்கும் சம்பந்தம் இல்லை என சுஷில் குமார் கூறினார். ஆனால் அவர் யார், சுஷில் குமாருக்கு ஏன் உதவினார் என அறிய முடிவு செய்த டில்லி போலீசார், அந்த பெண்ணுக்கு சம்மன் அனுப்பினர்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *