Share on Social Media


அதேபோல், `இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடுத்திட திட்டங்கள், அவர்களுக்கு வேளாண் மதிப்பு கூட்டும் ஆலைகள் தொடங்க ஆதரவு தருதல்’ என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த முதல் பட்ஜெட், வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல், செயல்பாட்டுக்கு வருமேயானால், விவசாயிகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும். அதனால், இத்தகைய அறிவிப்புகளுக்கு எங்கள் விவசாய சங்கத்தின் சார்பில் வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல், இந்த பட்ஜெட்டில் குறைகளும் இல்லாமல் இல்லை. 100 நாள் வேலைத்திட்டத்தை, 150 நாளாக உயர்த்தியிருப்பது தேவையில்லாதது.

இந்த 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் ஏன் வந்தது?. வருடா வருடம் ஜூன் 1 – ஆம் தேதி முதல் ஜனவரி 31 – ஆம் தேதி வரை வேளாண் காலம். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய நான்கு மாதங்களுக்கு விவசாய வேலை இல்லை. அந்த 100 நாளில் விவசாயத் தொழிளாளிகளின் வாழ்வாதாரத்துக்கு வழிசெய்வதற்காக, 100 நாள் வேலை திட்டம் வந்தது.

ஆனால் தற்போது, வேளாண்மை நடைபெறும் காலத்தில் 100 நாள் வேலை கொடுப்பதால், அரசு எவ்வளவு ஆதரவு கொடுத்தாலும், வேளாண் வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயிகளுக்கு கஷ்டம், நஷ்டம் ஏற்படுகிறது. அதை 150 நாள்களாக ஆக்கும்போது, கொஞ்சம் நஞ்சமாக விவசாய வேலைகளுக்கு கிடைக்கும் ஆள்களும் வராமல், விவசாயிகள் அல்லாட வேண்டி வரும். அதனால் இதனை தவிர்க்க, 100 நாள் திட்டத்தை, 150 நாளாக மாற்ற வேண்டாம். 100 நாள் வேலைத்திட்டமாகவே தொடரலாம். அந்த 100 நாள் வேலை திட்டத்தில் உண்மையான வேளாண் தொழிலாளிகள் மட்டும் பணிக்கு வரவேண்டும். வேளாண்மைதுறை முறையாக உண்மையான தொழிலாளர்களை ரெஜிஸ்டர் வைத்து கொள்ள வேண்டும்.

`வேலை இல்லை’ என்று 100 நாள் வேலை பார்க்கும் இடத்தில் தூங்கி விட்டு, வருபவர்கள் ஏராளம். இது தடுக்கப்படவேண்டும். இருந்தாலும், முதல் வேளாண் மசோதா என்பதால், குறைகாணாது நிறைகளை மட்டும் நினைத்து, இனிமேல் விவசாயிகளுக்கு ஒரு பொற்காலம் வரும் என்ற நம்பிக்கையில், இந்த வேளாண்மை பட்ஜெட்டை மனதார வாழ்த்தி வரவேற்கிறோம்” என்றார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *