Share on Social Media


மதுரை-மதுரை புதுநத்தம்ரோடு உயர்மட்ட பாலத்தின் சர்வீஸ் பாலம் இடிந்ததற்கு தொழில்நுட்ப கோளாறு, அனுபவமற்ற தொழிலாளர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள் இல்லாததே காரணம் என நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்த ரோட்டில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.545 கோடி மதிப்பில் தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.5 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் 2018 நவ., முதல் நடந்து வருகிறது. கடந்த ஆக.,28ல் நாராயணபுரம் அருகே சர்வீஸ் பாலத்தின் ஒரு பகுதி இடிந்ததில் உ.பி., தொழிலாளி இறந்தார். விபத்திற்கான காரணம் குறித்து திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்துள்ளது.அதில், ஹைட்ராலிக் பளுதுாக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, பாலத்தில் கர்டர் பொருத்தும் பணிகளில் கூடுதல் அனுபவம் இல்லாத தொழிலாளர்களை பயன்படுத்தியது, கண்காணிப்பு பொறியாளர்கள் இல்லாததே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்டர் பொருத்தும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும்,கட்டுமான முறையில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.பொதுவாக கட்டுமானத்தின் போது முதலில் கர்டர் பொருத்தி விட்டு, பின்னர் இரு புறமும் துாண்களின் மேல் இணைப்பு சுவர் கட்டப்படும். இனி முதலில் இணைப்பு சுவரை கட்டிவிட்டு பின்பு கர்டர் பொருத்த வேண்டும்.

தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் நிபுணர் குழு ஒப்புதல் பெற்று பணிகளை துவக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.இவ்விபத்து காரணமாக 6 கண்காணிப்பு பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அறிக்கை அடிப்படையில் ஒப்பந்ததாரரிடம் அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.