Share on Social Media

பிரேக்அப் தரும் கொடூரமான விஷயங்களில் முக்கியமானது நம்பிக்கையைத் தகர்ப்பது. யாரோ ஒருவர் உங்களை ஏமாற்றிவிட்டார் என்பதால் உங்களைச் சுற்றியிருக்கும் எல்லோரையும் நம்பாமல் இருப்பது நல்லதல்ல. நம்பிக்கை மட்டுமல்ல; பிரேக்அப் ஆன ரிலேஷன்ஷிப் தந்த ஹேங்ஓவருடன் யாரையும், எந்தச் சூழலையும் அணுகாதீர்கள்.

உங்களிடம் இருக்கும் ஏதோ சில கெட்ட விஷயங்கள் தான் பிரேக்அப்புக்கான காரணம் என நீங்கள் நினைத்தால் அதை மாற்ற முயற்சி செய்யுங்கள். உங்கள் பார்ட்னருக்காக இல்லை. உங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்றுவது என்பது உங்களுக்காக் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பிரேக்அப்

பிரேக்அப்
Pixabay

முதலில், நீங்கள் பிரேக்அப் வேண்டுமென கேட்டிருந்தால் அது சரியென்பதை நம்புங்கள். அந்தப் பிரச்னைகளோடு தொடர்ந்திருந்தால் பிரேக்அப் தரும் வலியைவிட அதிகமான வலியை இருவரும் சந்தித்திருக்க வேண்டுமென்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். அதனால் உங்களுக்கு மனச்சுமை என்றாலும் பரவாயில்லை. குழந்தைகளிடம் சொல்வார்களே… “நீயேதான விழுந்த… அப்புறம் ஏன் அழற?” குழந்தை அதுவாக விழுந்தாலும், அடிபட்டால் வலிக்கத்தானே செய்யும்? அது போலத்தான்.

உங்களால் முடிந்தால் ஒரு நீண்ட பயணம் செல்லுங்கள். அது இமயமலைக்காக இருக்கலாம். அல்லது கொல்லி மலையாக இருக்கலாம். ஒரு வாரக்காலம் எங்கேனும் பயணம் செய்யுங்கள். பல மனிதர்களைச் சந்தியுங்கள். உங்கள் எனர்ஜியை எல்லாம் இதுவரை ஒருவருக்காக மட்டுமே அதிகம் செலவழித்திருப்பீர்கள். அதைப் பலரோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

பிரேக்அப் நம்மை நார்மலாக இருக்க விடாது. ஒரு நொடி வெடித்துச் சிரிக்கத் தோன்றும்; அடுத்த நொடி வெடிகுண்டை வீசத் தோன்றும். எதுவாக இருந்தாலும் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். கட்டுப்படுத்தாதீர்கள். இதைப் புரிந்துகொள்ளக்கூடிய ஆட்களுடன் அந்த நேரத்தைச் செலவழியுங்கள்.

அப்படியெல்லாம் யாருமில்லை; இருந்தாலும் பேச விரும்பவில்லை என்பவர்கள் எழுதுங்கள். டைரியோ, ஃபேஸ்புக்கோ மனதில் தோன்றுவதை எழுதுங்கள். தேவைப்பட்டால் ஒரு ஃபேக் ஐடி தொடங்கி அதில் எழுதுங்கள்.

எழுதத் தெரியாதவர்கள் கிளப் ஹவுஸ் போன்ற சமூக வலைதளங்களில் சேருங்கள். அங்கே பிரேக்அப் ஆனவர்களுக்கென தனி ரூம்கள் உண்டு. அங்கே சென்று மனதில் தோன்றுவதையெல்லாம் பேசுங்கள். அதே மனநிலையிலிருக்கும் பிறர் பேசுவதையும் கேளுங்கள். கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும்.

மாற்றம்தான் பிரேக்அப்புக்கு நல்ல தீர்வு. வீட்டிலிருக்கும் பொருள்களை மாற்றி வையுங்கள். முடிந்தால் வீட்டையே மாற்றுங்கள். உங்கள் ரிலேஷன்ஷிப்பை நினைவுபடுத்தும் அனைத்தையும் கண்ணில் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நீண்டகாலம் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்கள் தங்களுக்குப் பிடித்த பல விஷயங்களைப் பார்ட்னருக்காகச் செய்யாமல் இருந்திருக்கலாம். உதாரணமாக, சைனஸ் காரணமாக மலைவாசஸ்தலங்களுக்குச் செல்ல உங்கள் பார்ட்னர் தயங்கியிருக்கலாம். அவருக்காக நீங்களும் போகாமல் இருந்திருக்கலாம். பிரேக்அப்புக்குப் பிறகு, அது போன்ற விஷயங்களைச் செய்யுங்கள். இதன் மூலம் அவரை மிஸ் செய்வதும் நடக்காது; உங்களுக்குப் பிடித்த விஷயங்களை நீண்டகாலம் கழித்துச் செய்வதால் புத்துணர்வாய் நீங்களும் உணரலாம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *