Share on Social Media

துபாய்: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அமித் பங்கல் அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடக்கிறது. ஆண்கள் 52 கி.கி., எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அமித் பங்கல், மங்கோலியாவின் கார்குகை சந்தித்தார். இதில் நடப்பு சாம்பியன் அமித் பங்கல் 3–2 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

தவிர சஞ்ஜீத் (91 கி.கி.,), சாக் சி (54 கி.கி.,), ஜாஸ்மைன் (57 கி.கி.,), சிம்ரஞ்சித் (60 கி.கி.,) உள்ளிட்டோர் காலிறுதியில் வெற்றி பெற்றனர். இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் இந்தியா சார்பில் குறைந்தபட்சம் 13 பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டன.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *