Share on Social Media


புதுடில்லி: ‘ஆக்சிஜன் பற்றாக்குறையால் டில்லியின் இரு மருத்துவமனைகளில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு, அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் அலட்சியமே காரணம்’ என, பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மற்றும் பத்ரா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, 33 கொரோனா நோயாளிகள் சமீபத்தில் உயிரிழந்தனர்.

இது குறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:டில்லி அரசிடம், திரவ மருத்துவ ஆக்சிஜன்களை சேமித்து வைக்கக்கூடிய வசதி, போதுமான அளவில் இல்லை. இதனால், பலமுறை அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆக்சிஜன்களை திருப்பி அளித்துள்ளனர். இதை, ‘பெசோ’ எனப்படும், பெட்ரோலியம் மற்றும் வெடி பொருட்கள் பாதுகாப்பு அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தி உள்ளது.

latest tamil news

டில்லியில் தற்போது ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு, டில்லி அரசின் திட்டமிடலில் இருந்த குறைபாடே காரணம். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் திறமையின்மை இப்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதற்கு துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதில் அளித்து, மன்னிப்பும் கோருவார் என எதிர்பார்க்கிறேன்.ஹரியானாவின் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து டில்லிக்கு, 120 டன் ஆக்சிஜன் சமீபத்தில் வினியோகிக்கப்பட்டது. சேகரித்து வைக்க இடவசதி இல்லை என கூறி, 74 டன் ஆக்சிஜனை டில்லி அரசு திரும்ப அனுப்பிவிட்டது.

டில்லியில் 30க்கும் மேற்பட்ட நோயாளிகள் சமீபத்தில் உயிரிழந்த இரு மருத்துவமனைகளும், ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து டில்லி அரசிடம் முறையிட்டும், எந்த பலனும் இல்லை. இந்த உயிரிழப்புகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *