Share on Social Media


ராகுலின் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் லக்ஷ்மி ராமச்சந்திரனிடம் பேசினோம் “மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தையும் காங்கிரஸ் எதிர்த்துக்கொண்டுதான் இருந்தது. ஆனாலும் பா.ஜ.க தனக்கு இருக்கும் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டேதான் இருந்தது. மக்களின் குரலாக எதிர்க்கட்சிகள் தங்களின் குரலை மட்டும்தான் பதிவு செய்ய முடிந்தது. எனவே நாடாளுமன்றம் நடந்தாலும் இல்லையென்றாலும் அவர்கள் தாங்கள் கொண்டுவர நினைத்த சட்டங்களை அமல்படுத்திக்கொண்டுதான் இருந்தார்கள், இருப்பார்கள். ஆனால், அதற்காக அவர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பாமல் இருக்க முடியாது. அதுவும் பெகாசஸ் போன்ற மிகப்பெரிய ஊழலுக்கு எதிராகக் குரல் எழுப்பாமல் இருந்தால் அது மிகப்பெரிய அழிவை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும். நாம் குரல் கொடுத்ததால் தான் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரே மத்திய பா.ஜ.க-வுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார். இப்படிக் கொஞ்சம், கொஞ்சமாக பா.ஜ.க-வுக்கு எதிரான குரல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு வித்திட்டது ராகுல்காந்தியின் தொடர் போராட்டங்கள்தான் . பண மதிப்பிழப்பு, சிஏஏ, வேளாண் சட்டங்கள், ரபேல் ஊழல் என ராகுல் பா.ஜ.க-வுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ராகுல் காந்தி மட்டும்தான். இதுவரை தனி ஆளாக இருந்த ராகுல்காந்தியின் குரல் தற்போது எதிர்க்கட்சிகளின் ஒருமித்த குரலாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

லக்ஷ்மி ராமச்சந்திரன்

லக்ஷ்மி ராமச்சந்திரன்

மாநில அதிகாரத்தில் பா.ஜ.க மூக்கை நுழைத்து, சர்வாதிகாரத்தோடு நடந்து கொள்வதால் அதற்கு ராகுல் காந்தியால் மட்டுமே தீர்வு காண முடியும் என்பதை இந்தியாவின் பெரும்பாலான அரசுகள் உணர்ந்துள்ளன. அதற்கு தற்போது நாடாளுமன்ற விவகாரங்களில் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் முக்கிய இடத்தில் இருக்கிறது என்றாலும் எப்போதும் மோடி எதிர்ப்பில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது, இருந்தது ராகுல்காந்திதான்” என ராகுல்காந்தியின் செயல்பாட்டிற்கான காரணங்களை விளக்கினார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *