454217 Tamil News Spot
Share on Social Media

தற்போது நம்மிடம் பேசிய சுப்புராஜ், “ஊழல் ஒழிப்புச் சட்டத்தை மட்டும் இந்தியாவில் அமல்படுத்த உதவி செய்துவிட்டு அரசியலுக்கு வரவில்லை என்றாலும், ரசிகர்களாகிய நாங்களும், தமிழக மக்களும் வருத்தப்பட மாட்டோம். இதை வலியுறுத்தி ஒரு சினிமா படம் எடுக்க அனைத்து ஸ்கிரிப்ட்டும் ரெடி செய்திருந்தேன். ஆனால், கொரோனா நேரத்தில் எங்கள் தலைவர் ரஜினி படத்தில் நடிக்க மாட்டார். அதேவேளையில், ஊழலை ஒழிக்க என்னிடம் சட்ட பார்ஃமுலா இருக்கிறது. அதை நான் ரஜினியிடம் தருவதற்கான நேரம் வந்துவிட்டது. அவர் அதைச் சட்ட நிபுணர்கள், முன்னாள் நீதிபதிகளிடம் காட்டி ஆய்வு செய்யட்டும். பிறகு, ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யட்டும். இந்தியாவில் ஊழலை ஒழிக்க ரஜினியால் சட்டப் புரட்சியே நடக்கும். அ.தி.மு.க., தி.மு.க கட்சிகள் வரும் தேர்தலில் தலா 3,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யக் காத்திருக்கின்றன. மக்களுக்கு லஞ்சமாகப் பணம் கொடுக்கவிருக்கிறார்கள். இதையெல்லாம் ஒழிக்க வேண்டும்” என்கிறார்.

தி.மு.க - அ.தி.மு.க

தி.மு.க – அ.தி.மு.க

இவரின் கருத்துக்கு ரஜினிக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால், ரஜினி இந்த ரூட்டில் பயணிக்கக் கூடாது என்று, ரஜினி மன்றத்தின் முக்கியத் தலைவர் ஒருவர் முட்டுக்கட்டை போடும் வேலையில் மும்முரமாயிருக்கிறார் என்கிற செய்தியும் வெளியாகியிருக்கிறது.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *