Share on Social Media


பொருளாதாரம் குறித்துத் தொடர்ந்து இயங்கி வரும் மன்மோகன் சிங், மத்திய பா.ஜ.க அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அதை `இந்தியப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய பேரழிவு’ என விமர்சனம் செய்தார். இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போதெல்லாம் அதற்குரிய ஆலோசனைகளையும் தரத் தவறவில்லை. மத்திய அரசின் கொள்கைகளால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்த சமயத்தில், “நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஐந்து சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்திருப்பது, நாம் நீண்டகால பொருளாதார மந்தநிலையின் மத்தியில் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இந்தியாவின் இளைஞர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் பல்வேறு தரப்பினரும் இதைவிடச் சிறந்த வாய்ப்புக்குத் தகுதியானவர்கள். இந்த பாதையில் இந்தியாவால் இனியும் தொடர முடியாது. எனவே, அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.

மேலும் கொரோனா காலங்களில் “மக்களின் வாழ்வாதாரங்களை உறுதி செய்து, பாதுகாப்பு நிலையை உறுதி செய்வதுடன், கணிசமான நேரடி ரொக்க உதவி அளிப்பதன் மூலம் அவர்களுக்குச் செலவழிக்கும் சக்தியை அளிக்க வேண்டும். அரசின் ஆதரவுடன் கூடிய கடன் உத்தரவாத திட்டங்கள் மூலம் தொழில் துறைக்கு போதிய மூலதனம் கிடைக்கச் செய்ய வேண்டும். நிறுவனத் தன்னாட்சி, செயல்முறைகள் மூலம் நிதித் துறைக்குப் பொறுப்பு அளிக்க வேண்டும்” என ஆலோசனை வழங்கினார்.”

மோடி - மன்மோகன் சிங்

மோடி – மன்மோகன் சிங்

“இந்தியாவின் பொருளாதார நிலை ஆழமான கவலையைத் தருகிறது. இதை எதிர்க்கட்சி உறுப்பினராக அல்ல, நாட்டின் குடிமகனாக, பொருளாதார மாணவனாகக் கூறுகிறேன்” என அரசியலையும் தாண்டி பொருளாதார நிபுணராக அரசுக்கு ஆலோசனை வழங்கினார். பொருளாதாரம் மட்டுமல்லாது அண்டை நாடுகளுடனான பிரச்னைகள் தொடர்பாகவும் பா.ஜ.க அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தான் சார்ந்த அரசியல் தாண்டி தன்னை ஒரு பொருளாதார மாணவராக எப்போதும் உணரும் மன்மோகன் இப்போதும் ஏதாவது ஒரு மூளையில் நாட்டின் பொருளாதாரம் குறித்துத்தான் யோசித்துக் கொண்டிருப்பார்..!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *