Share on Social Media


பெங்களூரு: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜ.,வில் இணைந்தவர்கள் மீண்டும் காங்கிரசிற்கு திரும்பி வரலாம் என்றும், கட்சி மாறுவதும் ஏமாற்றுவதும் அரசியலில் சகஜமானது எனவும் கர்நாடக காங்., தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து வெற்றிப்பெற்று ஆட்சி செய்தது. அப்போது திடீரென 17 எம்.எல்.ஏ.,க்கள் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்தனர். இதனால், ஆட்சி கவிழ்ந்து பா.ஜ.,வின் எடியூரப்பா தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றது. ஆட்சி கவிழக் காரணமாக இருந்த 17 எம்.எல்.ஏ.,க்கள் தற்போது பா.ஜ.,வில் உள்ள நிலையில், இவர்களை மீண்டும் காங்கிரசில் சேருமாறு அம்மாநில காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏமாற்றுவதும், கட்சி மாறுவதும் அரசியலில் சகஜமானது. இதற்கு நானோ, காங்கிரஸ் கட்சியோ விதிவிலக்கல்ல. எல்லா கட்சிகளிலும் இது போன்ற உதாரணங்கள் நிகழ்ந்துள்ளன. நாங்கள் பா.ஜ.,வில் இருந்து பிரதாப் கவுடா பாட்டிலை கூட்டி வந்தோம். ஒரு கட்சிக்கு போவதும், திருப்பி வருவதும் பெரிய விஷயமல்ல. எனவே அந்த 17 பேர் மட்டுமல்ல, யார் வேண்டுமென்றாலும் காங்கிரசுக்கு திரும்பி வரலாம். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை மதிக்கும், ஏற்றுக்கொள்ளும் எந்தவொரு தனிநபரும் எங்கள் கட்சியில் இணைவதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *