Share on Social Media


அனுப்பர்பாளையம்:திருப்பூர் அருகே அம்மாபாளையத்தில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒருங்கிணைந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாநகராட்சியின் முதலாம் மற்றும் இரண்டாம் மண்டல பகுதிகளில் தினமும், 300 டன் குப்பை சேகரமாகிறது.

இந்த குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் லாரி மூலம் எடுத்து சென்று திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாறைக்குழியில் கொட்டி வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக கொட்டி வரும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நிலத்தடி நீர் பாதிக்கிறது என அப்பகுதி பொதுமக்கள் குப்பை கொட்ட தொடர்ந்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தடுக்க வலியுறுத்தி, மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்திடம் பல மனுக்கள் கொடுத்துள்ளனர்.இருப்பினும், மக்களின் எதிர்ப்பை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அதிருப்தி அடைந்த அம்மாபாளையம் ஊர் பொதுமக்கள், அனைத்து கட்சியினர், குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆகியோர் ஒருங்கிணைந்து அம்மாபாளையம் பஸ் ஸ்டாப் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக, திருப்பூர் – அவிநாசி ரோட்டின் இருபுறமும் ‘சாமியானா’ அமைத்து, ஏரியா வாரியாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏறத்தாழ, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காலை, 9:00 மணிக்கு துவங்கிய போராட்டம், மாலை, 6:00 மணிக்கு நிறைவுபெற்றது.காத்திருப்பு போராட்டத்தில், பங்கேற்ற திருநங்கையர் கூறியதாவது:குப்பை கொட்டப்படும் பாறைக்குழி அருகில் வசித்து வருகிறோம். மொத்தம், 34 பேர் குடியிருந்து வந்தோம். துர்நாற்றம், சுகாதார கேட்டால், 13 பேர் வெளியேறி விட்டனர். கடுமையான நாற்றம் வீசுவதால், சாப்பிட முடியவில்லை. அடிக்கடி உடல்நிலையும் பாதிக்கப்படுகிறது. பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பள்ளிகளில், வகுப்பறையின் ஜன்னலை அடைத்து வைத்து தான் பாடம் நடத்த வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்துவதால், உடம்பில் அரிப்பு ஏற்படுகிறது.ஏற்கனவே, கொரோனா, இப்போது ஒமைக்ரான் என தொடர்ந்து அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். இந்த குப்பை பிரச்னை எங்களை பாடாய்ப்படுத்துகிறது. தயவு செய்து எங்களை வாழ விடுங்கள்.
போராட்டம் தொடரும்…

போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் கூறியதாவது:குப்பை கொட்டுவதால், ஒட்டு மொத்த அம்மாபாளையம் முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. வீட்டினுள் குடியிருக்க முடியவில்லை. கொசுக்கள், ஈக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அப்பகுதியில் அரசு மற்றும் இரண்டு தனியார் பள்ளி உள்ளது.பள்ளிகளில், வகுப்பறையின் ஜன்னலை அடைத்து வைத்து தான் பாடம் நடத்த வேண்டிய சூழல் உள்ளது. இதுதவிர நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு தண்ணீர் சிவப்பு நிறமாக மாறி உள்ளது.
இங்குள்ளவர்கள் குடிநீர் போக மற்ற பயன்பாட்டுக்காக ஆழ்துளை கிணற்று தண்ணீரைப் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால், ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்துவதால், உடம்பில் அரிப்பு ஏற்படுகிறது. குழந்தைகள் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகின்றனர்.
ஏற்கனவே, கொரோனா, இப்போது ஒமைக்ரான் என தொடர்ந்து அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். இந்த குப்பை பிரச்னை எங்களை பாடாய்ப்படுத்துகிறது. தயவு செய்து எங்களை வாழ விடுங்கள்.எனவே, குப்பை கொட்டுவதை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும். மீண்டும் கொட்டினால், மக்களின் நலனுக்காக எங்களது போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *