Share on Social Media


இலங்கையின் தென் பகுதியில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு, இலங்கை அரசு, 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கியுள்ளது. இந்தியாவுக்கு அருகில் அந்த துறைமுகம் உள்ளதால், இந்திய நலனுக்கு ஆபத்தாக அமையும்.
– ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ

‘அம்பாந்தோட்டை விவகாரம், இப்போதைக்கு புதிதாக முளைக்கவில்லையே… பல ஆண்டுகளாக நடக்கிறதே… துாங்கிட்டீங்களோ…’ என, கேட்க தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை.

மத்திய அரசுக்கு, மாநில அரசுகளுடன் தொடர்ந்து சண்டையிடுவதே வாடிக்கையாக போய் விட்டது. கடந்த ஆண்டு மஹாராஷ்டிராவுடன், இந்த ஆண்டு மேற்கு வங்கத்துடன் சண்டை. காங்., தலைமையிலான அரசில் எப்போதாவது இதை பார்த்துள்ளீர்களா?
– திருவனந்தபுரம் காங்., – எம்.பி., சசி தரூர்

‘காங்., சண்டை போடாது. மாறாக, கூட்டணி கட்சிகள் ஊழல் செய்வதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், திருவனந்தபுரம் காங்., – எம்.பி., சசி தரூர் அறிக்கை.

மருத்துவமனைகளில் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி அடிக்கலாம். இதர பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் போடுவது, கிருமி நாசினி அடிப்பதால் எவ்வித பயனும் இல்லை. இதனால், சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுமே தவிர, கொரோனா கண்டிப்பாக குறையாது.
– தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்

‘தமிழக அமைச்சரவையில் தியாகராஜன், மெய்யநாதன் போன்ற பல மேதைகள் இடம் பெற்றுள்ளனர் என, தமிழக மக்கள் புளகாங்கிதம் அடைந்துள்ளனர்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.

இன்று கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
– இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்

‘நாளைக்கு, அண்ணாதுரை பிறந்த நாள் வரும்; ஈ.வெ.ரா., பிறந்த நாள் வரும். சிறைகளை காலி செய்து, சிறை துறையினருக்கு வேலையில்லாமல் ஆக்கி விடுவீர்கள் போலிருக்கிறதே…’ என, சொல்லத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை.

ஸ்டாலினை எதிர்த்த பலர் மண்டியிட்டுள்ள நிலையில், கோவை காவிகளின் காமாலை கண்களுக்கு மட்டும், அவர் மீது காழ்ப்புணர்வு நிலவுகிறது. தங்களது அடிமை ஆட்சி இல்லையே என்ற எண்ணம் அவர்களுக்கு. விட்டில்களே விளைவறியாது விளையாடாதீர்கள்.
– திராவிடர் கழக தலைவர் வீரமணி

‘ஸ்டாலின் கூட இப்படி எல்லாம் ஜம்பம் பேச மாட்டார். ‘ஜிங் சா’க் கோஷ்டிகள் அதிகரித்து விட்டனரே…’ என, கவலை கொள்ள தோன்றும் வகையில், திராவிடர் கழக தலைவர் வீரமணி அறிக்கை.

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலை, கட்சிக்கு கொண்டு வந்ததே நான் தான். அப்போது ஜெ., வேறு ஆள் உனக்கு கிடைக்கவில்லையா என்றார் கோபமாக. நான், சிறந்த முறையில் செயல்படுவார் என, உறுதி அளித்ததன்படியே அவர் கட்சியில் சேர்க்கப்பட்டார்.
– அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி

‘ஜெ., உயிருடன் இல்லை என்பதால், அப்போதே அவர் அப்படி சொன்னார் என்கிறீர்களா…’ என, கேட்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி பேட்டி.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *