Share on Social Media


புதுடில்லி:டில்லி வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேற்று சந்தித்துப் பேசினார்.

மேற்கு வங்க முதல்வரும் திரிணமுல் காங். தலைவருமான மம்தா பானர்ஜி டில்லியில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக டில்லி வந்துள்ள இவர் பயணத்தின் நான்காம் நாளான நேற்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிரை சந்தித்துப் பேசினார்.அந்த சந்திப்பில் மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளவேண்டிய உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

இதையடுத்து தி.மு.க. – எம்.பி. கனிமொழியை மம்தா சந்தித்தார். அவருடன் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து கலந்துரையாடினார்.பின் பிரபல பாடலாசிரியர் ஜாவித் அக்தர் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஷபானா ஆஸ்மியை மம்தா சந்தித்தார். அதில் தேர்தல் பிரசார பாடல் ஒன்றை இயற்றிக்கொடுக்க அக்தரிடம் மம்தா கோரியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *