Share on Social Media


புதுடில்லி: ‘அமைச்சர்கள் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறது; தடுப்பூசி எண்ணிக்கை அதிகரிக்கவில்லை, பற்றாக்குறை தான் நீடிக்கிறது’ என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. புதிதாக 43 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இதைக் குறிப்பிட்டு ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அமைச்சர்கள் எண்ணிக்கைதான் அதிகரிக்கிறது, தடுப்பூசி அதிகரிக்கவில்லை; மாறாக பற்றாக்குறை தான் நீடிக்கிறது’ எனத் தெரிவித்து, #வேர்ஆர்வேக்சின்ஸ் என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டுள்ளார். மேலும், தடுப்பூசி குறித்த அட்டவணை ஒன்றையும் ராகுல் பதிவிட்டுள்ளார்.

latest tamil news

அந்த அட்டவணையில், ‘இந்தியாவில், வரும் டிசம்பர் மாதத்துக்குள் 60 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இதற்கு நாள்தோறும் 88 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த 7 நாட்களாக சராசரியாக நாள்தோறும் 34 லட்சம் தடுப்பூசிகள்தான் செலுத்தப்படுகின்றன, ஏறக்குறைய 54 லட்சம் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருக்கின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *