Share on Social Media


வாஷிங்டன்:  கொரோனா தொற்று நேரத்தில் இந்தியா செய்த உதவியை ஒருபோதும் மறக்க மாட்டோம் என அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கனை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், ‘‘கொரோனா நோய் தொற்றின் ஆரம்ப காலத்தில் அமெரிக்காவுக்காக இந்தியா உதவியது.

இதனை அமெரிக்கா ஒருபோதும் மறக்காது. இப்போது நாங்கள் இந்தியாவிற்காக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். பல முக்கியமான சவால்களில் அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து கூட்டாக செயல்படுகின்றது. கொரோனாவை எதிர்கொள்வதிலும் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இருநாட்டுக்கும் இடையிலான உறவானது முக்கியத்துவம் வாய்ந்தது. வலுவானது. இது வரும்காலங்களில் இன்னும் அதிகரிக்கும்” என்றார். இதேபோல் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “பல ஆண்டுகளாக இருநாடுகளின் உறவு வலுவடைந்துளது என நான் நினைக்கிறேன். இது மேலும் தொடரும் என நான் நம்புகிறேன். மிகவும் கடினமான தருணத்தில் எங்களுக்கு ஆதரவும், உதவியும் செய்த அமெரிக்காவிற்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார். அமைச்சர் ஜெய்சங்கர் பயணத்தில் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்ய உதவுமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *