Share on Social Media


ஜோ பைடனின் பதவியேற்புக்கு முன்பு, ட்ரம்ப் வன்முறைகளை தூண்டும் முயற்சிகளில் ஈடுபட இருப்பதால் ட்ரம்பை பதவி நீக்கம் செய்ய அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் கொண்டு வர முயற்சித்து, அதிபரை பதவியிலிருந்து விலக்க, துணை அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் 25-வது சட்ட திருத்தத்தை கொண்டு வர, ஜனநாயக கட்சியினர் முடிவு செய்தனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த துணை அதிபர் மைக் பென்ஸ், “தற்போதைய சூழ்நிலையில், ட்ரம்பை பதவி நீக்கம் செய்வது என்பது நாட்டின் நலனிற்குச் சரியாக இருக்காது” என்றார்.

இந்நிலையில், அமெரிக்க டெக்சாஸின் (Texas) அலமோவில் (Alamo) பேசிய ட்ரம்ப், ​ “என்னை பதவியில் இருந்து நீக்குவதற்கான 25 வது சட்ட திருத்தத்தை பற்றி விவாதிப்பதால் எனக்கு ஒரு ஆபத்தும் இல்லை, ஆனால் ஜோ பைடன் மற்றும் அவரது நிர்வாகத்தை இது பாதிக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும், “பிரதிநிதிகள் சபையில் சட்ட திருத்தம் கொன்டு வர முயற்சிக்கும் ஜனநாயகக் கட்சியினர், என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் புரளி. அமெரிக்க வரலாற்றில் செய்யப்படும் மிகப் பெரிய சூழ்ச்சி” எனக் கூறியவர், ஜோ பைடன் நிர்வாகத்தினர் செய்வது கோபத்தையும், பிரிவினையையும், வலியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நேரத்தில், இது அமெரிக்காவிற்கு மிகவும் ஆபத்தானது” என்றார்.

இதைத்தொடர்ந்து ட்ரம்பை பதவி நீக்கம் செய்யும் மசோதா இரண்டாவது முறையாக பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டது. இதில் ட்ரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதற்கு ஆதரவாக 223 எம்.பி.களும் எதிராக 205 எம்.பி.களும் வாக்களித்தனர்.

வரும் காலங்களில் ட்ரம்பை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையிலான மசோதாவையும் தாக்கல் செய்ய அமெரிக்க எம்.பி.கள் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கு 51 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் போதும் என்பதால் இந்த மசோதா எளிதில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *