Share on Social Media


அமெரிக்காவை சேர்ந்த மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மாத்திரையை வாங்க ஆஸ்திரேலியா அரசு திட்டமிட்டுள்ளது.
 
மெர்க் நிறுவனம் மால்னுபிராவிர் என்ற கொரோனா தடுப்பு மாத்திரையை தயாரித்து பரிசோதனை செய்து வருகிறது. இந்த மாத்திரை கொரோனா தீவிரமடைவதை குறைப்பதாக பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த மாத்திரையை மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க மெர்க் நிறுவனம் அமெரிக்கா மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பிக்க உள்ளது.
 
image
இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சுமார் 3 லட்சம் மாத்திரைகளை வாங்க திட்டமிருப்பதாக ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிஸன் தெரிவித்துள்ளார். தென்கொரியா, தாய்லாந்து , தைவான், மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளும் இந்த மாத்திரையை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

umz0QSMz3UU Tamil News Spot



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *