Share on Social Media


வன்முறையைத் தூண்டும்  விதமான கருத்துகளை பதிவிட்ட ட்ரம்ப்பின் கணக்கை முடக்கிய பின்னர், ட்விட்டரில் இருந்து அவரின் ஆதரவாளர்களின் கணக்குகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களில் ஒரு கும்பல் அமெரிக்க நாடாளுமன்றம் மீது  வன்முறை தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, இந்த சதித்திட்டத்துடன் தொடர்புடைய 70,000-க்கும் மேற்பட்ட கணக்குகளை நிறுத்திவைத்ததாக ட்விட்டர் நேற்று அறிவித்தது.

“வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்துகளை பதிவிட்ட ட்ரம்ப்பின் கணக்கை நிரந்தரமாக நிறுத்தி வைத்த சிறிது நேரத்திலேயே, ட்விட்டர் சமூக வலைப்பின்னல் அதன் தூய்மைப்படுத்தலைத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை முதல் நடந்த  எங்கள் முயற்சிகளின் விளைவாக 70,000 க்கும் மேற்பட்ட கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஒரு தனி நபர் பல கணக்குகளை இயக்கும் பல நிகழ்வுகளையும் கண்டறிந்தோம்” என ட்விட்டர் தெரிவித்தது.

image

நவம்பர் 3-ஆம் தேதி வெளியான அமேரிக்க தேர்தலின் முடிவை ஏற்க மறுத்து, ஆதாரமற்ற தகவல்களை பரப்பிய ட்ரம்பின் கணக்குகளை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளன. இந்த இரு தளங்களும் எதிர்கால வன்முறை அபாயத்தைக் குறிப்பிடுகின்றன. குறிப்பாக ஜனவரி 20 அன்று பைடன் பதவியேற்பதற்கு முன்பு, ஜனவரி 17 ம் தேதி அமெரிக்க கேபிடல் மற்றும் ஸ்டேட் கேபிடல் கட்டடங்கள் மீது இரண்டாவது தாக்குதல்  நடப்பதற்கு வாய்ப்புள்ளதாக இவை கூறியது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *