Share on Social Media


அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆய்வு மையத்தின் தகவல்படி 28-ம் தேதி புதன்கிழமை உள்ளூர் நேரம் இரவு 10:15 மணிக்கு 4 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இது மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முதலில் கண்டறியப்படும் அளவுக்கும் பின்னர் ஆய்வுகளுக்குப் பின்னரும் அளவுகள் மாறுபடலாம்.

முதலில் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் 7.2 ரிக்டர் அளவில் 35 கி.மீ ஆழத்தில் நடந்திருப்பதாகக் கணக்கிடப்பட்டது. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் இந்த நிலநடுக்கத்தை 8.1 ரிக்டர் அளவில் 10 கி.மீ ஆழத்தில் நடந்திருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது. மேலும், அமெரிக்கச் சுனாமி எச்சரிக்கை அமைப்பு அமெரிக்க பசிபிக் பிரதேசங்களான குவாம் மற்றும் வடக்கு மரியானா தீவுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. 1965-ம் ஆண்டுக்குப் பிறகு வடக்கு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது.

சுனாமி எச்சரிக்கை

இந்த மாதம் 22-ம் தேதி அலாஸ்காவின் தெற்கு நகரமான சிக்னிக்கில் இருந்து 75 கி.மீ தூரத்தில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாகாணத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என்ற போதிலும் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் அந்த பகுதி மக்களை எச்சரிக்கை படுத்தப்பட்டுள்ளனர். மேலும், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *