Share on Social Media


புதுடில்லி: பார்லிமென்ட் வளாகத்தில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்தனர்.

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நேற்று முன்தினம் தனித்தனியே டில்லி வந்தனர். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த இருவரும், நேற்று (ஜூலை -26) காலையில் பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். 20 நிமிடங்களுக்கு மேலாக இந்தச் சந்திப்பு நீடித்தது.

பின்னர் பழனிசாமி கூறுகையில், ”தமிழகத்துக்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவும், சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு பிரசாரம் செய்ததற்காக நன்றி தெரிவிக்கவும், பிரதமர் மோடியை சந்தித்தோம்,” என தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று பார்லிமென்ட் வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பன்னீர்செல்வமும், பழனிசாமியும் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, மனோஜ் பாண்டியன், தம்பிதுரை, தளவாய் சுந்தரம், ரவீந்தரநாத் உள்ளிட்டோரும் பங்கேற்றதாக தெரிகிறது. தமிழகத்தின் அரசியல் சூழல், கட்சி சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர், பழனிசாமி கூறுகையில், ‘மரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்தோம். அமித்ஷாவுடன் அரசியல் ரீதியாக பேசவில்லை. பிரதமர் மோடியுடன் என்ன பேசினோமோ அதைத்தான் பேசினோம்’. இவ்வாறு அவர் கூறினார்

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *