Share on Social Media


ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்ட எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சபை தலைவர் வெங்கையா நாயுடு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜ்யசபாவில் சமீபத்தில் அதிகாரிகளின் மேஜை மீது ஏறி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். சபையின் கண்ணியத்தை குலைக்கும் அந்த செயல்களால் அன்றிரவு முழுதும் தூக்கம் இல்லாமல் தவித்ததாக சபை தலைவர் வெங்கையா நாயுடு கண்ணீருடன் கூறினார்.மேலும், ஓ.பி.சி., இட ஒதுக்கீடு மசோதா குறித்த விவகாரத்தில், சபை பாதுகாவலர்களுடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மோதலில் ஈடுபட்டனர். கையில் வைத்திருந்த சில அறிக்கைகளை கிழித்து வீசி விட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேறினர்.

எம்.பி.,க்கள் தங்களை தாக்கியதாக பாதுகாவலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பாதுகாவலர்கள் தங்களை தாக்கியதாக எம்.பி.,க்கள் ஆவேசமாக குறிப்பிட்டனர்.இது தொடர்பாக ராஜ்யசபா செயலக உயர் அதிகாரிகள், பார்லிமென்ட் பாதுகாப்பு நடவடிக்கைகள் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து, அறிக்கை தயார் செய்து சபைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் தந்துள்ளனர்.இந்த விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து வெங்கையா நாயுடு, தீவிர ஆலோசனையில் உள்ளார். இதுபோன்ற முன்மாதிரி சம்பவங்கள் முந்தைய காலங்களில் என்னென்ன நடந்துள்ளன என்றும், அதற்கு எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

வெங்கையா நாயுடு உருக்கம்

ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு நேற்று கூறியதாவது:சபை சுமுகமாக நடக்க வேண்டுமெனில் அரசு மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்புகளுக்கும் அதற்கான கடமையும், பொறுப்பும் உள்ளது.அரசும், எதிர்க்கட்சிகளும் என் இரு கண்கள். எந்தவொரு விஷயத்தையும் தெளிவாக பார்க்க வேண்டுமெனில் இரு கண்களும் இருந்தால்தான் முடியும். எனவே இரு தரப்பையும் சமமாகவே கருதுகிறேன். விவாதங்கள் நடத்துவதற்குதான் சபை உள்ளது. தங்களுக்குள்ள அரசியல் மோதல்களை எல்லாம் சபைக்குள் காட்ட கூடாது. நடந்த சம்பவங்கள் குறித்து உரிய முறையில் ஆய்வு செய்யப்படுகிறது. அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து, இருதரப்பினரது வாதங்களையும் கருத்தில் வைத்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *