Share on Social Media


திருவொற்றியூர் : திருவொற்றியூரில், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தால், வகுப்புகளில் கல்லுாரி மாணவ – மாணவியர் மட்டுமின்றி பேராசிரியர்களும் உயிர்பலி அபாயத்தில் உள்ளனர்.

அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருவொற்றியூரில், 2012ல் சென்னை பல்கலைக் கழக உறுப்பு கலைக் கல்லுாரி துவக்கப்பட்டது. அதன்படி, தேரடி, பூந்தோட்டம் வளாகத்தின் மாநகராட்சி தொடக்கப் பள்ளி கட்டடத்தில், தற்காலிகமாக வகுப்புகள் நடந்தன. நிரந்தர கட்டடத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.கல்லுாரியில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., சி.ஏ., பி.காம், பி.சி.ஏ., உள்ளிட்ட ஐந்து பிரிவுகள் மட்டுமே உள்ளன. தற்போது, 700 மாணவியர் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.கட்டட வசதி இல்லாததால், பாடப் பிரிவுகள் விஸ்தரிப்பு செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது. கழிப்பறை வசதியில்லாததால், பிள்ளைகளை கல்லுாரியில் சேர்க்க பெற்றோரும் தயங்குகின்றனர்.இந்த வளாகத்தில், மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. மேலும், விளையாட்டு பயிற்சி மையமும் செயல்படுகிறது. இதனால் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சிலர், கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டு வருவதால், மாணவியர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் கட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, பல காரணங்களால் தடைபட்டது

.இறுதியாக, திருவொற்றியூர் புதிய பேருந்து நிலையம் அருகே, கூட்டுறவு துறையின் 5 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டுஉள்ளது.தற்போது, கல்லுாரி செயல்படும் கட்டடம், மிக அபாயகரமான நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.குறிப்பாக, முதல்வர் அறையின் முகப்பு, பேராசிரியைகளின் ஓய்வறை, பேராசிரியர்கள் அறை, அலுவலக அறையில், மேல்தளம் இடிந்து விழுந்துள்ளது. அவ்வப்போது, சிமென்ட் பூச்சு உதிர்ந்து விழுவதால், உயிர் பலி அபாயம் உள்ளது.இதே நிலை நீடித்தால், நெல்லை பள்ளி சுவர் இடிந்து விபத்து போல், திருவொற்றியூர் கல்லுாரி கட்டடமும் இடிந்து விழுந்து, விபத்து ஏற்படும் என, பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, கல்லுாரிக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *