Share on Social Media



கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பணிகளை துரிதப்படுத்த கோரி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட, கோவை மாவட்டத்தை சேர்ந்த 9 அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் பாஜவை சேர்ந்த வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆகியோர் கலெக்டர் நாகராஜனை நேற்று நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதன்பின், எஸ்.பி.வேலுமணி  நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்திலேயே கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினமும்  4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதைத்தடுக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதற்காக, கோவைக்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்க வேண்டும். அரசின் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். கோவை மாவட்டத்தில் அதிமுக 100க்கு 100 வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும், தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் பாகுபாடு பார்ப்பது இல்லை. எல்லோரையும் அரவணைத்து செல்கிறார். இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *