Share on Social Media


பி.டி.ஜே.எஸ் என்ற கட்சி பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கான அரசியல் இயக்கம். பா.ஜ.க-வுடன் கூட்டணியில் உள்ள பி.டி.ஜெ.எஸ் சபரிமலை மேல்சாந்தி விவகாரத்தைக் கையில் எடுத்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக கேரள தலைமைச் செயலகம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது அக்கட்சி.

இதுகுறித்து பி.டி.ஜெ.எஸ் கட்சியின் தலைவர் துஷார் வெள்ளாப்பள்ளி கூறுகையில், “சாதி பிரிவினையை ஏற்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு இவ்வாறு நடந்துகொள்கிறது. சபரிமலையில் மேல்சாந்தியாக மந்திரம் மற்றும் பூஜைகளை முறைப்படி கற்ற இந்துக்களை சாதி பேதம் இல்லாமல் நியமிக்க வேண்டும். சாதி பேதம் இல்லாமல் புதிய கேரளம் உருவாக சபரிமலை மேல்சாந்தி நியமனத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இப்போது தலைமைச் செயலகம் முன்பு தொடங்கிய போராட்டம் கேரளம் முழுவதும் நடத்தப்படும்” என்றார்.

துஷார் வெள்ளாப்பள்ளி

துஷார் வெள்ளாப்பள்ளி

இது எளிதில் நடந்துவிடாது என்பதை உணர்ந்த பா.ஜ.க இந்த விவகாரத்தில் அமைதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து இந்து அமைப்புகள் விவாதம் நடத்த வேண்டும் என்றும் துஷார் வெள்ளாப்பள்ளி வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரளத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக சில கோயில்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த சி.பி.எம் ஆட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் முதன் முதலாக கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில்தான் பிரசித்திபெற்ற சபரிமலை கோயில் மேல்சாந்தியாக அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *