Share on Social Media


மதுரை : கொரோனா ஊரடங்கில் மலர் வணிகம் பாதிக்க கூடாது என்பதற்காக மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் ஸ்டாண்டில் இன்று (ஜூன் 2) முதல் தற்காலிகமாக மொத்த மலர் வணிகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

பூ மார்க்கட்டில் கூட்டத்தை தவிர்க்க தற்காலிகமாக வேறிடத்திற்கு மாற்ற வேளாண்மை கல்லுாரி, ஒத்தக்கடை மைதானம் உள்ளிட்ட நான்கு இடங்களை அமைச்சர் மூர்த்தி, கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன், கலெக்டர் அனீஷ் சேகர், வேளாண் விற்பனை குழு செயலாளர் மெர்ஸி ஜெயராணி, தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இறுதியில் மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் ஸ்டாண்ட்டில் மொத்த மலர் வணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

இதற்காக அமைச்சர், அதிகாரிகளுக்கு சீர்மிகு மதுரை மலர் கமிஷன் வியாபாரிகள் சங்க தலைவர் முத்து, செயலாளர் தவுலத் பாட்சா நன்றி தெரிவித்துள்ளனர். இன்று முதல் மலர் வணிகம் நடக்கும் எனவும் தெரிவித்தனர். பின் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் திருப்பரங்குன்றம் ஒன்றியம் நாகமலைபுதுக்கோட்டை, வேடர் புளியங்குளம், தனக்கன்குளம் அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்ட கொரோனா கவனிப்பு மையத்தை பார்வையிட்டனர்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *