Share on Social Media


இலுப்பூர்: அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் எடுத்த ஒரு டிப்பர் லாரி மற்றும் ஒரு டிராக்டரை அன்னவாசல் போலீசார் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மேலகருப்பாடிபட்டி கருப்பாடி குளத்தில் மணல் எடுப்பதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதன் வழியே வந்த ஒரு டிராக்டர் மற்றும் ஒரு டிப்பர் லாரியை சோதனை செய்ததில் அனுமதியின்றி மணல் எடுத்து வந்ததாக தெரியவந்தது இதையடுத்து டிப்பர் லாரி மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அறந்தாங்கி: அறந்தாங்கியை அடுத்த மொட்டையாண்டியில் மினிலாரி மூலம் சிலர் மணல் கடத்துவதாக அறந்தாங்கி தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு தகவல் வந்தது. தகவலின்பேரில், தாசில்தார் மார்ட்டின்லூதர்கிங், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்கு சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த மினிலாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அறந்தாங்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *