Share on Social Media


அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் பத்து வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு கடந்த வந்த பாதை, அதை எதிர்கொண்ட விதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முனைவர் சுரேஷிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்…

“வேலுமணி மீதான டெண்டர் வழக்கு தொடங்கிய மையப் புள்ளி எது?”

“2014 முதல் 2015 வரை சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒதுக்கப்பட்ட டெண்டர்களில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அறப்போர் இயக்கம் அது தொடர்பான தரவுகளை ஆர்.டி.ஐ மூலமாகத் திரட்டத் தொடங்கினார்கள். அந்தத் தரவுகளின் மூலம் நூற்றுக்கணக்கான கோடி முறைகேடுகள் நடந்திருப்பதைக் கண்டறிந்தார்கள். அந்த டெண்டர்களில் பங்கேற்றவர்கள் அனைவரும் அமைச்சரின் சகோதரர், உறவினர், நண்பர்களாக இருந்ததையும் கண்டறிந்தனர். அதையொட்டியும் துறையின் அமைச்சர் என்ற ரீதியிலும்தான் எஸ்.பி.வேலுமணி மீது புகார் கொடுத்தனர். இந்த முறைகேடுகள் அதிகாரிகளின் உதவியின்றி நடந்திருக்காது என்பதால் அவர்கள் மீதும் விரிவாகப் புகார் அளித்திருக்கிறார்கள்.”

வழக்கறிஞர் சுரேஷ்

Also Read: `சந்தை விலை ரூ.105; வேலுமணி டிரஸ்ட்டுக்கு வெறும் 5 ரூபாய்’ கோவை மாநகராட்சியில் அறப்போர் இயக்கம் மனு!

“எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் ஏற்கெனவே அரசு டெண்டர்களில் பங்கெடுத்த ஒப்பந்ததாரர் தானே?”

“வேலுமணியின் சகோதரர் அன்பரசன் ஒப்பந்ததாரராக இருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், சுமார் 188 டெண்டர்கள் அவரின் சகோதரரின் செந்தில் அண்டு கோ நிறுவனத்திற்கும் அவருக்கு நெருக்கமான கே.சி.பி எண்டர்பிரசஸ், வரதன் இன்பிராஸ்டரக்ஸர், கான்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா, எஸ்.பி.பில்டர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டிருப்பதால்தானே சந்தேகமே எழுகிறது”

vikatan 2021 02 097f9c33 5d85 4e10 a2a0 269371f6260d 6019ca37651f5 Tamil News Spot
எடப்பாடி பழனிசாமி – வேலுமணி

“ஆனால், ‘அமைச்சர் என்கிற கொள்கை முடிவு மட்டும்தான் எடுத்தேன் டெண்டருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’யென்று எஸ்.பி வேலுமணி சொல்லியிருக்கிறாரே?”

“டெண்டர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தாலே அதில் வேலுமணிக்குத் தொடர்பிருப்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததும் எந்தச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் அது நிரூபணம் ஆகிவிடும். அதுவரை அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம்”

Also Read: வெயிட்டாக கவனித்த வேலுமணி, தங்கமணி முதல் முதல்வர் ஸ்டாலின் அதிரடி வரை…. கழுகார் அப்டேட்ஸ்!

“தன்மீது களங்கம் விளைவிக்கவே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது என எஸ்.பி.வேலுமணி கூறியிருக்கிறாரே?”

“முற்றிலும் பொய். எந்தத் திருடனும் இதுவரை தன் மீது சுமத்தப்பட்ட எந்தக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதாக சரித்திரம் இல்லை. அதுமாதிரிதான் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் இந்தக் கருத்து இருக்கிறது. 100 சதவிகித ஆதாரங்களோடு வேலுமணி மீதும் அவரது சகாக்கள் மீதும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருக்கிறது. அதனடிப்படையில் தான் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.”

“வேலுமணி வழக்கு மட்டும் இவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுப்பதற்கான காரணம் என்ன?”

“வேலுமணி மீது புகார் அளித்துக் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. அ.தி.மு.க அரசு இருந்ததால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டார்கள். அடுத்தடுத்து வழக்குகளை எடுக்கும்போதுதான் அ.தி.மு.க-வில் இருக்கும் எல்லா மணிகள் மீதும் நடவடிக்கை பாயும்.”

“வழக்கு விசாரணையின்போது அ.தி.மு.க சார்பில் நெருக்கடிகள் ஏதும் கொடுக்கப்பட்டதா?”

“எனக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. ஆனால், அறப்போர் இயக்கத்தினர் மீதுதான் தொடர்ந்து வேலுமணி சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுக்கொண்டே இருந்தன.”

IMG 20210814 WA0039 Tamil News Spot
வேலுமணி

“டெண்டர் விஷயத்தில் என்னென்ன மாதிரியான முறைகேடுகள் நடந்திருக்கின்றன?”

“முன்னரே பேசி வைத்துக்கொண்டுதான் டெண்டரே போட்டிருக்கிறார்கள். முதல் 50 டெண்டருக்கு ஒருவர் குறைவாகவும் மற்றொருவர் அதிகமாகவும் டெண்டர் கேட்பது. அடுத்த டெண்டருக்கு முன்னர் டெண்டர் கிடைக்காதவர் அதிகமாகவும் கிடைத்தவர் குறைவாகவும் கோட் செய்வது. இப்படித்தான் கே.சி.பி.என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் சந்திரபிரகாஷ், செந்தில் அண்டு கோ-வின் நிறுவனர், வேலுமணியின் சகோதரர் அன்பரசன் பழனிசாமி, எஸ்.பி.பில்டர்ஸ் ஆர்.முருகேசன் ஆகிய மூவரும் அனைத்து டெண்டர்களையும் வாங்கியிருக்கிறார்கள். இவர்கள் தவிர வேறு யாரும் டெண்டரைப் பெற முடியாத அளவு டெண்டர் சூதாட்டமே நிகழ்த்தியிருக்கிறார்கள்.”

Also Read: ஊழலில் எஸ்.பி வேலுமணி-க்கு அடுத்து கே.சி வீரமணி..! – சிக்கும் ஆதாரங்கள்!

“லஞ்ச ஒழிப்புத்துறை மீது நம்பிக்கை இல்லை என நீதிமன்றத்தில் வாதிட்டிருக்கிறீர்களே?”

“லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் செய்த நம்பிக்கை துரோகம் மிகப்பெரியது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கைப்பாவையாகவே எப்போதும் அவர்கள் செயல்படுகிறார்கள். அரசியல்வாதிகளுக்குப் பயப்படாமல் அரசியல் சாசனத்துக்கு மனசாட்சிக்குப் பயந்து இவர்கள் தங்கள் பணிகளைச் செய்யவேண்டும். ஆனால், வேலுமணி விவகாரத்தில் அப்படி அவர்கள் நடந்து கொள்ளவில்லை.”

610dc77aa73f1 Tamil News Spot
வேலுமணி

“டெண்டர் விவகாரத்தில் ஒப்பந்ததாரர்கள் யாரும் புகார் கொடுத்ததாகத் தெரியவில்லையே?”

“சிலர் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களும் எஸ்.பி.வேலுமணியின் சகாக்களால் மிரட்டப்பட்டிருக்கிறார்கள். அந்த பயத்தில் அடுத்து எவரும் துணிந்து புகார் கொடுக்க முன்வரவில்லை. ஆனால், அறப்போர் இயக்கம் மற்றும் இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு முறைகேடுகளைக் கலைந்து மக்கள் நலன் சார்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என உந்துதல் இருக்கிறது. அதனால்தான் இந்த வழக்கு குறுகிய காலத்தில் இவ்வளவு தூரத்தைக் கடந்து வந்திருக்கிறது.”

“டெண்டர் ஒதுக்கும் நடைமுறை எப்படி நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?”

“டெண்டர் வெளிப்படைத்தன்மையுடன் ஒதுக்கப்பட வேண்டும். அனைத்தும் இணையத்தில் பதிவேற்றி எல்லோரும் பார்க்கும்படி அதை வைக்க வேண்டும். பணம் பரிவர்த்தனை, ஒதுக்கீட்டு முறை என எல்லாவற்றிலும் டிஜிட்டல் மயமாக இருந்தால் கூடுதல் சிறப்பு. ராஜஸ்தான் மாநிலத்தில் இப்படித்தான் டெண்டர்கள் விடப்படுகின்றன. இதனால் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு மக்களுக்குச் சிறப்பான சேவைகள் கிடைக்கும்”Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *