Share on Social Media


சிம்பு நடித்த `ஈஸ்வரன்’ படத்தில் `செல்லக்குட்டி ராசாத்தி… போறதென்ன சூடேத்தி…’ பாடல் 100 மில்லியன் வியூஸைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. தமன் இசையில் அந்தப் பாடலை எஸ்.டி.ஆர் எனும் சிம்புவுடன் இணைந்து பாடியிருப்பவர் ரோஷினி.

பின்னணிப் பாடல் துறைக்குப் புதியவரல்ல ரோஷினி. `குத்து’ படத்தில் `போட்டுத் தாக்கு’ பாடலை சிம்புவுடன் இணைந்து பாடியவரும் இவர்தான். இப்போது விஜய் டிவியின் முகங்களில் ஒருவர். விஜய் டிவியில் `சூப்பர் சிங்கர்’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர், அடுத்து `மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியிலும் போட்டியாளர். கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் ரோஷினியிடம் பேசினோம்.

கணவருடன் ரோஷினி

கணவருடன் ரோஷினி

“பிஸியா பாடிட்டிருந்த டைம்லதான் எனக்கு கல்யாணமாச்சு. கணவர் ஜாக் அமெரிக்காவுல ஐ.டி வேலையில இருந்தார். ஆறு மாச ஷார்ட் ட்ரிப்னு நினைச்சுதான் ரெண்டு பேரும் அமெரிக்கா போனோம். ஆனா, அவருக்கு புராஜெக்ட் முடியலை. அதனால சில வருஷங்கள் அங்கேயே இருக்க வேண்டியதாயிடுச்சு. யு.எஸ் போறதுக்கு முன்னாடி நான் பாடினது `திருடன் போலீஸ்’ படத்துல `மூடு பனிக்குள்’ பாட்டு. யு.எஸ் போன ரெண்டாவது வருஷமே நான் என் கரியர்ல பெரிய இடைவெளி எடுத்துக்கிட்டேன்னு புரிஞ்சது. இதை இப்படியே விட்டுடக் கூடாது, மறுபடி பாட ஆரம்பிக்கணும்னு நினைச்சபோது கன்சீவ் ஆயிட்டேன். குழந்தை, குடும்பம்னு மறுபடி எதைப் பத்தியும் யோசிக்க நேரமில்லை. பாப்பாவுக்கு ஒரு வயசானபோதுதான் மறுபடி என் கரியரை பத்தி யோசிச்சேன்!” – இடையில் சில வருடங்கள் காணாமல் போனதன் பின்னணியோடு பேசுகிறார் ரோஷினி.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *