Share on Social Media


காஞ்சிபுரம்-ஊரடங்கில் சுற்றியவர்களிடம் இருந்து போலீசார், 5,326 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும், மாவட்ட காவல் துறை மேற்கொண்டுள்ளது.எனினும், அத்தியாவசிய தேவையின்றி, இருசக்கர வாகனங்களில் செல்வோரை, போலீசார் தடுத்து நிறுத்தி, வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில், 5,475 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன; 5,326 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இருப்பினும், சில இடங்களில் சர்வ சாதாரணமாக கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், முக கவசம் அணியாமல் கூட்டமாக இருப்பது, பலருக்கும் தொற்றுபரவும் சூழலை உருவாக்குகிறது.காஞ்சிபுரம், ஒலிமுகமது பேட்டை பகுதியில் காலை, மாலை நேரங்களில், சைக்கிளில் விற்பனை செய்யும் டீ குடிப்பதற்காக, அவ்வாறு கூட்டமாக இருக்கின்றனர். அப்பகுதியில் கூட்டத்தை தவிர்க்க, போலீஸ் ரோந்து செல்ல வேண்டும் என, சமுக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *