Share on Social Media


கும்மிடிப்பூண்டி, நவ. 11–கும்மிடிப்பூண்டி பகுதியில், சில தினங்களாக, கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக, சென்னை — கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் பல பகுதிகள் முற்றிலும் சேதம் அடைந்து, குண்டும், குழியுமாக மாறியது.அதில் குளம் போல் மழை நீர் தேங்கியிருப்பதால், பள்ளம் இருப்பது தெரியாமல், ஏராளமான கன ரக மற்றும் இலகு ரக வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன.

இந்த நிலையில், தற்போது அதி கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தேசிய நெடுஞ்சாலை மேலும் சேதம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், அந்த தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள தமிழக பகுதியில், வாகன போக்குவரத்து குறைந்த அளவில் காணப்பட்டது.இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும், கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடி, நேற்று, வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *