Share on Social Media


சென்னை: அ.தி.மு.க -வில் அக்கட்சியின் 19 மாவட்டங்களுக்கான உட்கட்சி தேர்தல் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க உட்கட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கடந்த 7- ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

 இரண்டு பதவிகளுக்கும் பன்னீர் செல்வம் மற்றும் பழனிசாமியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இருவரும் போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் மாநகர ஆட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிளை உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தலை சேலத்தில் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலத்தில் தொடங்கி வைத்தார். இதேபோல், மாங்காட்டில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் பணியை தொடங்கி வைத்தார்.     



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *