Share on Social Media


சென்னையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவரும் ஐ.எஃப்.எஸ் அதிகாரியுமான வெங்கடாசலம் கடந்த வியாழக்கிழமை (02.12.2021) அன்று பிற்பகல் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் தொடர்பாக பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “வெங்கடாசலம் தற்கொலையில் இதுவரை எந்தச் சந்தேகமும் இல்லை, அவரது பிரேத பரிசோதனை அறிக்கை, செல்போன் ஆய்வு முடிவுகளுக்குப் பின்னரே எதையும் சொல்ல முடியும். லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பவில்லை, மிரட்டல் எதுவும் கொடுக்கவில்லை” எனக் தெரிவித்தார்.

ஆனால் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அ.தி.மு.க தேர்தல் பிரிவு துணைச் செயலாளர், வழக்கறிஞர் இன்பதுரை, “செப்டம்பர் மாதம் 2019-ம் ஆண்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக வெங்கடாசலத்தை அப்போதைய அ.தி.மு.க அரசு நியமித்தது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்படும் ஒருவர் அந்தப் பதவியில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கலாம் என்பது உச்ச நீதிமன்ற விதி. அதன்படி 2021 செப்டம்பர் வரை பதவியில் நீடிக்க வேண்டும். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு வெங்கடாசலத்தைப் பதவி விலகச் சொன்னது. ஆனால், அதை அவர் ஏற்காததால் அவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி அவர் வீட்டில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வழக்குப பதிவு செய்தது. இப்படி ராஜினாமா செய்ய அரசுத் தரப்பில் கொடுத்த அழுத்தம், அதைத் தொடர்ந்து அவர் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு போன்றவற்றால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தான் வெங்கடாசலம் தற்கொலை செய்துகொண்டார். இது கொலையா, தற்கொலையா என்பதை விசாரிக்க வேண்டும்” எனக் கூறினார். வெங்கடாசலத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் எனவும் பா.ஜ.க தரப்பிலும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

தம்பிதுரை - இன்பதுரை அதிமுக

தம்பிதுரை – இன்பதுரை அதிமுக

வெங்கடாசலம் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கும் நிலையில், அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையும் அ.தி.மு.க தேர்தல் பிரிவு துணைச் செயலாளர், வழக்கறிஞர் இன்பதுரையும், டெல்லி சென்றிருப்பதாகத் நமக்கு அந்தக் கட்சி வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்தன. இருவரின் டெல்லி விஜயம் குறித்த பின்னணியை விசாரித்தோம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.