Share on Social Media


சசிகலாவின் நடவடிக்கை குறித்து அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம், “தலைவர்களின் நினைவிடங்களில் மரியாதை செலுத்திவிட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது குறித்து அறிவிப்பு வெளியிடத் திட்டமிட்டிருந்தார். ஆனால், சசிகலா எதிர்பார்த்த அளவுக்குத் தொண்டர்கள் கூடாததும் நினைவிடத்தில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளும் அவரை எரிச்சலுக்குள்ளாக்கியது. வீட்டு வாசலில் மிகப்பெரிய தொண்டர்கள் கூட்டம் ஒரு சில மாவட்டச் செயலாளர்களின் மரியாதை, தி.நகரிலிருந்து நினைவிடம் செல்லும் வழியெல்லாம் அ.தி.மு.க கொடியோடு தொண்டர்கள் வரவேற்பு, நினைவிடத்தில் மிகப்பெரிய கூட்டம் என எதிர்பார்த்திருந்தவருக்கு அது நடக்கவில்லை என்பதால் மிகப்பெரிய ஏமாற்றத்துக்குள்ளானார் சசிகலா.

மேலும், தினகரன் தன்னுடைய ஆதரவாளர்களை நினைவிடத்துக்கு அனுப்பவில்லை என்பதும் அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க-வினர் விமர்சனம் செய்ததுக்கு ஏற்றா மாதிரியே எல்லாம் நடந்திருப்பதும் அவருக்குப் பெரிய உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்குப் பின் கட்சி தன் கட்டுப்பாட்டுக்கு வரும் முக்கிய நிர்வாகிகள் தன் பக்கம் வருவார்கள் என்ற கணக்கெல்லாம் பொய்யாய் போனதால் கோபத்தின் உச்சியிலிருக்கிறார். அக்டோபர் 17-ம் தேதி எம்.ஜி.ஆர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, அ.தி.மு.க தலைமைக் கழக அலுவலகத்துக்குச் சென்று கொடியேற்றலாம் என நினைத்திருந்தவர் தற்போது அங்கிருந்து நேராக வீட்டுக்கே போய்விடலாம் என்று முடிவு செய்திருக்கிறார். வழக்கம்போல தன்னுடைய இந்த அரசியல் கணக்கும் பிசுபிசுத்துப் போய்விட்டதில் சசிகலா மிகப்பெரிய அப்செட்” என்றனர்.

ஜெ. நினைவிடதில் சசிகலா

ஜெ. நினைவிடதில் சசிகலா

அரசியல் வட்டாரத்தில் கருணாநிதி மறைவுக்குப்பின் மெரினாவில் மு.க.அழகிரி நடத்திய பேரணியின் தோல்வியோடு இதை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் சிலர். சசிகலாவின் அடுத்த அஸ்திரம் என்ன… அது எந்தளவு வலுவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *