Share on Social Media


டிசம்பர் 3-ம் தேதியன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தலை ரத்து செய்யக்கோரி கே.சி பழனிச்சாமி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். உறுப்பினர்கள் முறைபடுத்தவில்லை, உறுப்பினர் அட்டை வழங்குவதில் முறைகேடு. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என்பது கே.சி.பழனிச்சாமியின் கோரிக்கை.

ஆக, களேபேரங்கள் ஆங்காங்கே கிளம்பிவிட்டன. ஒருவேளை, கட்சியின் அமைப்பு தேர்தல் திட்டமிட்டபடி நடந்து முடிந்தால், கட்சியின் கீழ்மட்டம் முதல் தலைமை கழக நிர்வாகிகள் வரையிலான பதவிகளுக்கான நியமனங்கள் நடக்கும். கட்சி முக்கிய பதவியில் இருப்பவர்கள் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளை வைத்திருக்கிறார்கள். ஒரே பதவிதான் என்று முடிவு செய்திருக்கிறார்களாம். அந்த வகையில், ஒ.பன்னீர்செல்வத்திடம் இருக்கும் பொருளாளர் பதவி வைத்திலிங்கத்துக்கு போகலாம் என்கிறார்கள். தலைமை நிலைய செயலாளராக கே.பி. முனுசாமியின் பெயர் அடிபடுகிறது. அமைப்புச்செயலாளர்களாக தற்போதுள்ளவர்களால் டிராஃபிக் ஜாமே ஏற்படுகிறதாம். அதனால், அவர்களில் பாதிப்பேர்களை குறைத்து 30 பேர் மட்டுமே இருக்கும்படியாக செய்யப்போகிறார்களாம். ஏற்கனவே அமைக்கப்பட்ட வழிகாட்டுதல் குழுவில் 11 பேர் இருந்தார்கள். அதில், மாணிக்கம் என்பவர் பா.ஜ.க-வுக்கு சென்றுவிட்டார். மீதி இருப்பவர்கள் 10 பேர்கள். இவர்களுடன் கூடுதலாக 8 பேர்களை புதியதாக சேர்த்து அந்த குழுவை வலுப்படுத்த பேசிக்கொண்டிருக்கிறார்கள. ஏற்கனவே உள்ள குழுவில் உள்ள திண்டுக்கல் சீனிவாசனை கழட்டிவிட்டு, அவருக்கு பதில் செல்லூர்ராஜை நியமிக்கப்படலாம் என்கிறார்கள். இவர்களைத்தவிர, நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், தம்பிதுரை, தனபால், கே.பி. அன்பழகன், இசக்கி சுப்பையா, சிவபதி ஆகியோருக்கு வாய்ப்புகள் வரலாமாம். இந்த வழிகாட்டுதல் குழுவின் தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்படுவார் என்கிற தகவலும் பரபரக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.