Share on Social Media

அசாதாரண பொருளாதார ஏற்றம் மற்றும் அரசின் தலையீட்டால் சில சாதாரணக் கம்பெனிகள் அசாதாரண வளர்ச்சி காட்டி, க்ரோத் ஸ்டாக் போன்று தோற்றமளிக்கும். இயல்பு நிலை திரும்பும்போது இவற்றால் தாக்குப் பிடிக்க முடியாது. ஆகவே க்ரோத் ஸ்டாக்ஸில் முதலீடு செய்ய விரும்புபவர்கள்

1. சம்பந்தப்பட்ட கம்பெனி,

2. நிலவும் சமூக-பொருளாதார சூழ்நிலை,

3. கம்பெனியின் நீண்ட கால லாபம் ஈட்டும் திறன்,

4. கம்பெனி நிர்வாகிகளின் அனுபவம் மற்றும் திறமை – இவற்றை முழுமையாக அலசி ஆராய்ந்து இது க்ரோத் ஸ்டாக்தானா என்று கண்டறிய வேண்டும்.

Stock Market

Stock Market
Photo by Mark Finn on Unsplash

க்ரோத் ஸ்டாக்ஸ் உங்களுக்கு ஏற்றதா?

க்ரோத் ஸ்டாக்ஸ் பொதுவாக விலை அதிகமுள்ளவையாக இருக்கும். இவற்றில் முதலீடு செய்பவர்கள் இந்த அதிக விலையை, அடுத்த பலவருடங்கள் வரக்கூடிய லாபத்துக்கான விலை என்று எண்ணித்தான் முதலீடு செய்கிறார்கள். இந்தக் கணக்கு தவறாகவும் போகலாம். ஆகவே ரிஸ்க்கைத் தவிர்க்க எண்ணும் முதலீட்டாளர்களும், வாங்கி சில காலத்துக்குள்ளேயே லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுபவர்களும் இந்த ஏரியாவுக்குள் வராதிருப்பது நல்லது.

– அடுத்து புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு சந்திப்போம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *