Share on Social Media


சமூக வலைதளங்களில் திராவிடத் தலைவர்களை கேலி செய்யும் வகையிலான உங்கள் பதிவுகள் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. இது குறித்து உங்களது கருத்து என்ன?

`மேதகு' இயக்குநர் கிட்டு

`மேதகு’ இயக்குநர் கிட்டு

“திராவிட சித்தாந்தங்களை முழுமையாக நான் ஏற்பதில்லை. எனவே, நையாண்டியாக சில பதிவுகளைப் பகிர்ந்திருப்பேன். திராவிட மேடைகளிலேயே கருத்துகளை நையாண்டியாகத்தான் பதிவு செய்வார்கள். அண்ணாவின் நாடகங்களாக இருக்கட்டும், கருணாநிதி ஐயாவின் பேச்சாக இருக்கட்டும்… எல்லாவற்றிலும் நையாண்டி இருக்கும். ‘நீங்கள் பதிவு செய்வது போன்றே நையாண்டியாக நாங்களும் எங்கள் கருத்துக்களைப் பதிவு செய்வோம்’ எனப் பல கருத்துகளை நானும் பகிர்ந்திருக்கிறேன். அரசியல் விமர்சனம் அதிகமாகச் செய்யும் பழக்கம் எனக்கு இருக்கிறது. ‘அரசியல் லாபத்துக்காக நீங்க கூட்டணி வெச்சிக்கிறீங்க’, ‘சாதியா பிரிஞ்ச தலைவர்களை வெச்சி நீங்க அரசியல் பண்றீங்க’ என்கிற தொனியில் என் விமர்சனம் இருக்கும். நான் முன்பு பதிவு செய்த அந்தப் பதிவுகளைத் தற்போது பகிர்ந்து என்னை விமர்சனம் செய்கிறார்கள். இந்தப் படத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒன்று என இதை வைத்துக் கொள்ளலாம்.

சீமான், நாம் தமிழர் கட்சி

சீமான், நாம் தமிழர் கட்சி

சீமானுக்கு எதிராக நான் சில கருத்துக்களைப் பேசுவேன், அதனை வைத்து இந்தப் படத்தை நிறுத்திவிடலாம் என்றெல்லாம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சீமானின் மீது எனக்கு மரியாதை உண்டு. 2019-ல் என் குடும்ப சூழல் காரணமாக நான் அந்தக் கட்சியில் இருந்து வெளியே வந்துவிட்டேன். அவ்வளவுதான். சீமானுக்கு எதிராக என்னைத் திருப்பப்பார்த்தார்கள். அது நடக்கவில்லை என்றதும் என்னுடைய ஃபேஸ்புக் பதிவுகளை வைத்துக்கொண்டு பிரச்னை செய்கிறார்கள்.

நான் கூற வரும் கருத்துகளை நையாண்டியாகப் பதிவு செய்திருப்பேன் அவ்வளவுதான். தலைவர்களைப் பற்றி நான் பதிவிட்ட கருத்துகள் மற்றவர்களைப் புண்படுத்தி இருந்தது என்றால், அதற்கு வருத்தம் தெரிவிக்கவும் நான் தயங்க மாட்டேன். மேலும், விமர்சனம் செய்து கொண்டிருந்தது ஒரு காலம். தற்போது நான் அதையெல்லாம் கடந்து வந்துவிட்டேன். விமர்சனம் செய்வது மட்டுமே அரசியல் அல்ல என்பது புரிந்து அதனைவிட்டு விலகி வந்து சில காலம் ஆகிவிட்டது” என்கிறார் கிட்டு.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *