Share on Social Media


சூர்யா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஜெய்பீம். இப்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. சூர்யாவின் ஜோடியாக இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது கீர்த்தி சுரேஷ் சீஸன் போல. டாப் ஹீரோக்களின் சாய்ஸ் கீர்த்தியாகத்தான் இருக்கிறார். ‘அண்ணாத்த’யில் ரஜினியின் தங்கையாக நடித்த திருப்தியில் மிளிர்கிறார். இன்னொரு புறம்,

கீர்த்தி சுரேஷ்

விஜய்-66 படத்திலும் கீர்த்தி நடிப்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கிடையே அவர் தெலுங்கில் நடித்த ‘குட் லக் சகி’ இம்மாத இறுதியில் ரிலீஸாகிறது. மோகன்லாலுடன் நடித்த ‘மரைக்காயர்’ படத்தில் சின்ன கதாபாத்திரம்தான் என்றாலும், அது பேசப்படும் பாத்திரம் என்கிறார்கள். அந்த படமும் அடுத்த மாதம் வெளியாகிறது. இது தவிர மகேஷ்பாபுடன் நடித்து வரும், ‘சர்க்காரு வாரி பாட்டா’ படத்தின் படப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. அதன் படப்பிடிப்பிற்காக ஸ்பெயின் சென்று திரும்பிய கீர்த்தி, இப்போது சிரஞ்சீவியின் தங்கையாக ‘போலோ சங்க’ரில் நடிக்க உள்ளார். தமிழில் வெளியான ‘வேதாளம்’ படத்தின் ரீமேக் இதுவாகும்.

keer Tamil News Spot
சிரஞ்சீவி பட பூஜையில்..

இதற்கிடையே செல்வராகவன் நடித்த ‘சாணி காகிதம்’ படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது. அந்தப் படம் ஒடிடி ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது என்றும் தகவல். கீர்த்தி ஏற்கெனவே சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு மீண்டும் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்திருப்பதில் கீர்த்தி வட்டாரம் செம ஹேப்பியாகியிருக்கிறது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *