Share on Social Media


தூத்துக்குடி விமான நிலைய சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு,“ஊழலின் ஊற்றுக் கண்ணானதி.மு.க, அ.தி.மு.க மீது குற்றம்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷனே வியந்துபோய் விஞ்ஞான ரீதியில் தி.மு.க-வினர் ஊழல் செய்திருப்பதாக அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

கடம்பூர் ராஜு

கடம்பூர் ராஜு

அதே போல, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாயை ஆ. ராசாவும், கனிமொழியும் கூட்டாகச் சேர்ந்து ஊழல் செய்தது அனைவரும் அறிந்ததுதான். இது தொடர்பாக, இருவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவ்வழக்கில், சி.பி.ஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் போதிய ஆதாரமில்லாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் , 2ஜி வழக்கில் சி.பி.ஐ மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *