Share on Social Media


மாநிலங்களின் வளர்ச்சிக்கு கூடுதல் அதிகாரம், நிதி தேவைப்படலாம்; அதை முன்னெடுக்க பார்லிமென்ட், நீதிமன்றங்கள் உள்ளன. அதை விட்டு தமிழர்களிடம், இந்தியா மீது வெறுப்பையும், தமிழ் மாநில பிரிவினை எண்ணங்களையும் விதைக்கும் தி.மு.க.,வின் அரசியல், ஆபத்தாக முடியும்.
– புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி

‘அடித்தளத்தை அசைப்பதிலேயே இவர்கள் குறியாக இருக்கின்றனர். இவர்களுக்கு யார் தான் புரிய வைப்பதோ என்பது தெரியவில்லை…’ என, கவலை தெரிவிக்க தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை.

கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதை விசாரிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா வலியுறுத்த வேண்டும். தவறு செய்தவர்களை கண்டிக்க, விசாரணையை கோர வேண்டும்.
– முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா

‘கொரோனா எங்கிருந்து வந்தது என்பது தான், சின்னப்பிள்ளைகளுக்கு கூட தெரியுமே; அதற்கு ஏன், ஐ.நா., விசாரணை…’ எனக் கேட்க தோன்றும் வகையில், பா.ஜ.,விலிருந்து வெளியேறியுள்ள, முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா அறிக்கை.

விழுப்புரம், -காணை அருகே மாம்பழப்பட்டு கிராமத்தில், ஏரிக்கரையில் இருந்த குடிநீர் தொட்டியை தலித் மக்கள் பயன்படுத்துவது பிடிக்காமல், ஜாதிவெறி மனநோயாளிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அரசே அந்த மன நோயாளிகளை கைது செய்!
– விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

‘வீடியோவுடன் அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள். அப்படியே போலீசில் சொல்லி, குற்றவாளிகளை உள்ளே தள்ள வேண்டியது தானே; எதற்கு இந்த அறிக்கை…’ எனக் கேட்க தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை.

சிறு, குறு, நடுத்தர கடனாளிகளுக்கு கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் கோரி, ரிசர்வ் வங்கியை வலியுறுத்தும் முயற்சிக்கு, 12 மாநில முதல்வர்களின் கூட்டு வலிமையை வெளிப்படுத்த, ஸ்டாலின் எடுக்கும் முயற்சி, கூட்டாட்சி சகாப்தத்தின் முதல் அத்தியாயம்; வெல்லட்டும் அவர் முயற்சி.
– தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்

‘பத்துக்கு ஒரு அறிக்கையிலாவது, மாநில காங்., தலைவரை பாராட்டினால், உங்கள் கட்சி இங்கு கொஞ்சமாவது வளருமே…’ என, சொல்ல தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.

இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவுகளை துண்டித்து, சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் மத்திய அரசு தடுக்க முற்பட வேண்டும்.
– நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

‘அதற்கு இலங்கைக்கு, பல லட்சம் கோடி டாலர் கடன், முதலீடு செய்ய வேண்டும்; செய்ய முடியுமா…’ எனக் கேட்க துாண்டும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *