Share on Social Media


போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிறவர்கள் ஒரு கட்டத்தில் தம் தவற்றை உணர்ந்து அதிலிருந்து மீண்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப நினைக்கலாம் அல்லது அவர்களின் குடும்பத்தார் அவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்க நினைத்து சிகிச்சைக்கு அழைத்து வரலாம்.

சிகிச்சை முடிந்து சில நாள்கள் நன்றாக இருப்பார்கள். திடீரென மீண்டும் போதைக்குத் திரும்பியிருப்பார்கள். மீண்டும் அதே போராட்டம் தொடரும். மீண்டவர்கள் மீண்டும் போதை அடிமைகளாவதன் பின்னணியை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் மிதுன் பிரசாத்.

Representational Image

“போதைக்கு அடிமையாகும் எல்லோரும் ஏதோ ஒரு காரணத்துக்காகவே அதற்குள் போகிறார்கள். எப்படிப்பட்ட உளவியல் பிரச்னையையும் `பயோ சைக்கோ சோஷியல் மாடல்’ என்ற அடிப்படையிலேயே ஆராய வேண்டும். உதாரணத்துக்கு ஒருவரது அடிமைத்தனத்துக்கு உடல்ரீதியான காரணம் இருக்கலாம். அதாவது மூளை தொடர்பான காரணங்கள்…

அடுத்தது உளவியல் ரீதியான காரணங்கள்… உதாரணத்துக்கு குறைந்த தன்னம்பிக்கை, பதற்றம், மன அழுத்தம் போன்றவை.

மூன்றாவதாக சமூக ரீதியான காரணங்கள்… குடும்பம் மற்றும் சக மனிதர்களால் ஏற்படும் பிரச்னைகள்.

எனவே, ஒருவர் போதை மீட்பு சிகிச்சைக்கு வரும்போது இந்த மூன்றில் அவர் எதன் காரணமாகப் போதைப் பழக்கத்துக்குள் போனார் என்பதை முதலில் ஆராய்வோம்.

மூளையில் போதைக்கு அடிமையாக்கும் விஷயம் நடக்கலாம். சில கெமிக்கல்கள் கூடும்போதோ, குறையும்போதோ யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் போதைக்கு அடிமையாகலாம். அது போதை மருந்தாகவோ, குடியாகவோ, குறிப்பிட்ட ஒன்றுக்கு அடிமையாவதாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. எதற்கு வேண்டுமானாலும் அடிமையாகலாம்.

man 390339 960 720 Tamil News Spot
addiction

எனவே, முதலில் மூளை தொடர்பான காரணங்களை ஆராய வேண்டும். அதே நபருக்கு உளவியல் ரீதியான காரணங்களால் போதை அடிமைத்தனம் இருக்கலாம். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்ற குறைவான தன்னம்பிக்கை, மற்றவர்களிடம் உறுதியாகப் பேச முடியாதது, பிரச்னைகளைக் கையாளத் தெரியாத மனநிலை போன்றவை. எனவே, பிரச்னை ஏற்படும்போது அதைக் கையாளத் தெரியாமல் அவர்கள் நாடும் முதல் ஆயுதம் போதையாகத்தான் இருக்கும்.

போதை மருந்து எடுக்கத் தோன்றும் உணர்வைக் குறைக்கவெல்லாம் இன்று மருந்துகள் உள்ளன.

அதை `ஆன்டி க்ரேவிங் மெடிகேஷன்’ என்று சொல்வோம். பல வருடங்களாகக் குடிப்பழக்கம் உள்ள ஒரு நபருக்கு மதுக்கடை அருகில் போனாலே உடனே குடிக்க வேண்டும் என்ற உந்துதல் வருமில்லையா… அதுதான் க்ரேவிங் எனப்படும் தேடல்… அந்தத் தேடலைக் குறைப்பதே ஆன்டி க்ரேவிங் மெடிகேஷன். உடல்ரீதியாக ஒருவருக்கு இந்தச் சிகிச்சையைப் பரிந்துரைத்திருப்போம்.

WhatsApp Image 2021 12 12 at 12 07 03 PM Tamil News Spot
மனநல மருத்துவர் மிதுன் பிரசாத்

அதே நபருக்கு மனைவியுடன் அடிக்கடி சண்டை வரலாம்… கூட்டுக்குடும்பத்தில் வசிக்கும் நபருக்கு சகோதரருடன் அடிக்கடி சண்டை வரலாம். அதையெல்லாம் விசாரிக்காமல், மேலோட்டமான சிகிச்சையைப் பரிந்துரைக்கும்போது, மீண்டும் குடும்பத்துக்குள் சண்டை, சச்சரவு வரும்போது அந்தப் பிரச்னையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அந்த நபர் நாடுவது போதையாகவே இருக்கும். `எனக்கு டென்ஷன் அதிகமாகும்போதுதான் நான் போதைப் பொருள்களை எடுத்துக்கிறேன்’ என்று பொதுவாகச் சொல்வார்கள்.

எனவே, போதைப்பழக்கத்திலிருந்து மீள நினைத்து சிகிச்சைக்கு வரும் ஒரு நபருக்கு உடலியல் ரீதியான, உளவியல்ரீதியான, சமூக ரீதியான என எல்லா காரணங்களையும் கேட்டறிந்த பிறகுதான் சிகிச்சையைத் தொடங்க வேண்டும். மேலோட்டமாக ஒன்றை மட்டும் பார்த்துவிட்டு சிகிச்சை கொடுத்தால், அந்த நபர் மீண்டும் போதை வலைக்குத் திரும்ப வாய்ப்புகள் அதிகம்.

mishal ibrahim bAk6aJSIohU unsplash Tamil News Spot
Drug Addiction (Representational Image)

Also Read: சிறுவன் செய்த அடுத்தடுத்த கொலைகள்; போதையால் நிகழ்ந்த துயரம்! – நான் அடிமை இல்லை – 19

போதைப்பொருள் தேடுதல் வேட்டையை அமலாக்கப் பிரிவினர் எப்படி நடத்துகின்றனர், சட்டத்தை வளைத்து குற்றவாளிகள் எப்படியெல்லாம் தப்பிக்கின்றனர் என்று விளக்குகிறார்

ஐ.ஆர்.எஸ் அதிகாரியும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருபவருமான வெங்கடேஷ் பாபு:

“பொதுவாக, தேடுதல் வேட்டைக்குச் செல்லும்போது ஒரே சமயத்தில் 30 – 40 இடங்களுக்குச் செல்வோம். ஒரே நேரத்தில் செல்வதற்குக் காரணம் என்னவென்றால் ஓரிடத்தில் தேடுதல் நடத்துவது மற்றோர் இடத்துக்குத் தெரிந்துவிட்டால் அவர்கள் சுதாரித்துக்கொண்டு தப்பித்துவிடுவார்கள். இன்று காலையில் 10 மணிக்கு `Strike time’ என்று முடிவு செய்யப்படும். சென்னையில் தாம்பரத்தில் ஆபரேஷன் நடைபெறவிருக்கிறது என வைத்துக்கொள்வோம். ஒரு டீம் நுங்கம்பாக்கத்தில் இருந்து கிளம்பினால் தாம்பரம் வருவதற்கு ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் ஆகலாம். அதே போன்று செங்கல்பட்டு, மதுரை, திருச்சி என்று வெவ்வேறு இடங்களுக்குச் செல்பவர்கள் `Strike Time’ 10 மணியைக் கணக்கிட்டு அதற்கு முன்பாகவே கிளம்பிச் சென்றுவிடுவார்கள். செல்பவர்களுக்கும் மதுரை, திருச்சி என்ற ஊரின் பெயர்கள் மட்டுமே தெரிவிக்கப்படும். அங்கு சென்றடைந்த பிறகுதான் அவர்களுக்கு எந்த இடம் என்று தெரியும்.

இதுபோன்ற ஆபரேஷனுக்குச் செல்லும் குழுவிடம் சீல் செய்யப்பட்ட கவர் இருக்கும். அதை எத்தனை மணிக்குத் திறக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் வழங்கப்படும். அத்தனை மணிக்கு அதைத் திறந்து அவர்கள் எந்த முகவரிக்குச் செல்ல வேண்டும் என்பதைப் பார்த்துவிட்டுச் செல்வார்கள். வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் சரியாக `Strike Time’ 10 மணிக்கு அந்த இடத்துக்குள் அது வீடு, அலுவலகம், குடோன், கட்டடம் என எதுவாக இருந்தாலும் அதற்கு நுழைவோம். உள்ளே நுழைந்ததும் அங்கிருப்பவர்களின் செல்போனைக் கைப்பற்றி, வேறு யாருக்கும் தகவல் கொடுக்காமல் இருக்கும்படி செய்துவிடுவார்கள்.

சிலர் எங்கள் டீம் உள்ளே நுழைந்ததும் வீட்டுக்குப் பின்னால் ஓடிச்சென்று ஆதாரங்களை அழிப்பார்கள். அதனால் ஓரிடத்துக்குச் செல்லும்போது முன்வழியாக நுழைய வேண்டுமா பின் வழியாக நுழைய வேண்டுமா என்பது போன்ற திட்டமிடல்களை எல்லாம் முடித்துவிட்டுத்தான் செல்வோம். இதுபோன்று ஆபரேஷன் நடத்துவதற்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படும். சரியான பயிற்சியை மேற்கொண்டவர்களுக்குத்தான் முறையாக விசாரித்து, குற்றவாளிகளுக்கு வழக்கில் தீர்ப்பு வாங்கிக் கொடுக்க முடியும்.

Venkatesh Babu Tamil News Spot
IRS officer Venkatesh Babu

போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்குகள் நிறைய போடப்படுகின்றன. ஆனால், குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் வழக்குகளின் சதவிகிதம் மிகவும் குறைவுதான். காரணம், சரியாக ஆதாரங்களைத் திரட்டியிருக்க மாட்டார்கள். அந்த ஓட்டையைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள். அதற்காக குற்றம் நடைபெறவில்லை என்று ஆகிவிடாது. நடந்த குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்றுதான் அர்த்தம்.

பள்ளி மாணவரிடம் தெரிந்த நபரோ தெரியாத நபரோ ஒரு பொட்டலத்தைக் கொடுத்து இதைக் கொஞ்சம் நேரம் வைத்திருக்குமாறு கூறிச் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அது என்னவென்றே தெரியாமல் அதை வாங்கி வைத்து, அது போதைப்பொருள் என்பதால் வழக்கில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. இதே போன்று விமான நிலையங்களில் தங்கள் லக்கேஜின் எடை கூடிவிட்டது என்றோ, வயதானவர்கள் மாத்திரைகளை மறந்து வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள் என்றோ ஏமாற்றி போதைப்பொருளைக் கொடுத்துவிடுபவர்கள் இருக்கிறார்கள். இதுபோன்று அறியாமல் மாட்டிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். அதற்காக சட்டத்தைத் தளர்த்தினால் அதைப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பித்துவிடுவார்கள்.

Tamil News Spot
Drugs (Representational Image)

Also Read: கஞ்சா செடி பயிரிடுவது குற்றமா? சட்டம் என்ன சொல்கிறது? – நான் அடிமை இல்லை – 20

NDPS சட்டமே கடுமையானதுதான். இதில் நம் நாடு மட்டும் தன்னிச்சையாக திருத்தங்களை மேற்கொள்ள முடியாது. ஐக்கிய நாடுகள் சபையிலுள்ள உறுப்பு நாடுகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும். சட்டத்தைக் கடுமையாக்குவதாக இருந்தாலும், தளர்த்துவதாக இருந்தாலும் இந்த நாடுகள் கலந்து ஆலோசித்துதான் எடுக்க முடியும்” என்றார்.

மீண்டும் மீண்டும் போதைக்கு அடிமையாகிறவர்கள் விஷயத்தில் கவனிக்க வேண்டிய மற்ற விஷயங்கள் என்னென்ன?

போதைப்பழக்கம் பரம்பரையாகத் தொடருமா?

அடுத்த அத்தியாயத்தில்..!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *