Share on Social Media


‘மன்மத லீலை’யின் தயாரிப்பாளரான ‘கலாகேந்திரா’ கோவிந்தராஜின் குடும்பத்தினருக்கும் இந்தத் தகவல் சென்று சேர்ந்துவிட்டதாம். ராக்போர்ட் முருகானந்தமோ அல்லது வெங்கட்பிரபு தரப்பிலிருந்தோ தொடர்பு கொள்வார்களென எதிர்பார்த்தார்களாம். ஆனால் இப்போதுவரை யாரும் தொடர்பு கொள்ளாததால், சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறார்களாம்.

இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்கத் தொடர்பு கொண்ட போது, அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.

தயாரிப்பாளர் முருகானந்தத்திடம் கேட்டபோது, “அசோக் செல்வனை வைத்து நாங்க எடுக்கிற படத்தின் கதை புதுசு. இது எந்தப் படத்தின் ரீமேக்கோ அல்லது தழுவலோ இல்லை. படத்தின் டைட்டிலா ’மன்மத லீலை’னு வச்சா நல்லா இருக்கும்னு இயக்குநர் தரப்பு நினைச்சிருக்கலாம். அதுபத்தி படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர்கள்கிட்டக் கூடப் பேசறதாகவும் சொன்னாங்க. அது எந்த நிலையில் இருக்குன்னு எனக்குத் தெரியலை’’ என்றார்.

’தில்லு முல்லு’ விவகாரமுமே முதலில் ’கலாகேந்திரா’ குடும்பத்தினருக்குத் தெரியாமலேதான் நடந்ததாகவும், ‘தில்லு முல்லு 2’ வெளியாக இருந்த கடைசி நேரத்தில்தான் விஷயம் தெரிந்து அவர்கள் தலையிட, செட்டில்மெண்ட் ஆனதாம்.

இந்தப் புதிய படம் ‘மன்மத லீலை 2’வா எனத் தெரியவில்லை, ஆனால், அதே ‘தில்லு முல்லு’தான் மறுபடியும் அரங்கேறியிருப்பதாக பலர் செய்தி வாசிக்கிறார்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *