Share on Social Media


லக்னோ: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தனது பெயரை அகிலேஷ் அலி ஜின்னா என்றும், தனது கட்சியின் பெயரை ஜின்னாவாதிக் கட்சி எனவும் மாற்றிக்கொள்ளட்டும் என உத்தர பிரதேசம் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கேசவ் பிரசாத் மவுரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறுபான்மையினரைத் திருப்திபடுத்தும் அரசியல் செய்வதற்காக சமாஜ்வாதி கட்சி ஜின்னாவைப் பற்றிப் பேசுகிறது. அதனால்தான் அகிலேஷ் யாதவ் தனது பெயரை அகிலேஷ் அலி ஜின்னா என்று மாற்றிக் கொள்ளட்டும். அவரின் கட்சியின் பெயரையும் ஜின்னாவாதிக் கட்சி எனவும் மாற்றிக் கொள்ளட்டும். ஜின்னா ஒருபோதும் தேர்தலில் வெற்றிப்பெற உதவமாட்டார். உ.பி., மக்கள் பா.ஜ.,வையும், தாமரை சின்னத்தையும் தான் தேர்ந்தெடுப்பார்கள். முகமது அலி ஜின்னாவோ அல்லது முக்தர் அன்சாரியோ தேர்தலில் வெல்ல உதவமாட்டார்கள்.

உ.பி., மக்களை நேர்மையுடன் அணுகும் கட்சி பா.ஜ., மட்டும்தான். மாபியாக்கள், கூலிப்படைகளை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை கொண்டுவந்தது பா.ஜ., அரசு தான். கடந்த 3 தேர்தலில் தோல்வி அடைந்ததால் எதிர்க்கட்சிகள் அச்சத்தில் உள்ளன. இந்த முறையும் தோற்றுவிடுவோம் என அஞ்சுகின்றனர். ஆனால், எங்களுக்குக் கள நிலவரம் என்னவென்று தெரியும். கிளை மட்டத்திலிருந்து பா.ஜ., வலுவாக இருக்கிறது. இது சமாஜ்வாதி கட்சிக்கும் தெரியும். அவர்களிடம்தான் கூலிப்படைகளும், குண்டர்களும், மாபியாக்களும் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *