Share on Social Media


டில்லி: இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பிரிட்டன் விமான தயாரிப்பு நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் கொள்முதல் தடை மோடி அரசால் நீக்கப்பட்டதை காங்., கட்சி விமர்சித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி இரண்டாவது முறையாக இந்தியாவை ஆட்சி செய்தபோது பிரிட்டனின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 விவிஐபி ஹெலிகாப்டர்களை சட்டவிரோதமாக காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்கள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இது அப்போது பெரும் அரசியல் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த ஒப்பந்தத்துக்காக காங்கிரஸ் கட்சியில் 450 கோடி ரூபாய் லஞ்ச தொகையை அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து பெற்றதாக அப்போது பாஜ., குற்றம் சாட்டி இருந்தது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை அப்போது காங்கிரஸ் தலைமை மறுத்தது. இந்த சர்ச்சை துவங்கியதுமுதல் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் இந்தியாவில் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மோடி அரசு இந்த தடையை நீக்கியுள்ளது.

இதுகுறித்து தற்போது கர்நாடக காங்., பொதுச்செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

latest tamil news

‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தை ஓர் போலி நிறுவனம் என்று முன்னதாக பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதனை ஆமோதித்து இருந்தார். முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் கட்சி ஊழலில் ஈடுபட்டதாக நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால் கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜ., மத்தியில் ஆட்சியைப் பிடித்தபோது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீதான தடையை நீக்கியது.

இப்போது கொள்முதல் தடையும் நீக்கியுள்ளது. அப்போது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஆவணங்களை காட்டி ஊடகங்கள் அனைத்தும் கட்டுரைகளை வெளியிட்டன. இதேபோல தற்போது மோடி ஆட்சியில் ஊடகங்கள் செயல்படுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *