Share on Social Media

லூனா சாலமன்

லூனா சாலமன்
Alex Brandon

”அகதிகளின் மீதிருக்கும் பிம்பத்தை மாற்ற விரும்புகிறேன். ஒலிம்பிக்கின் மூலம் கிடைக்கும் விஷயங்களை அகதிகளின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தப் போகிறேன்” என உறுதியாகச் சொல்கிறார் லூனா.

சிரியாவிலிருந்து படகில் தப்பித்து ஒரு தீவில் கரையேறி 7 நாடுகளை கடந்து ஜெர்மனிக்கு சென்று இப்போது ஒலிம்பிக்கிற்கு வந்திருக்கிறார் யுஸ்ரா மார்டினி. தப்பித்து வந்த போது படகு பழுதாக பல சமயங்களில் நீச்சலடித்தப்படியே அதை சரி செய்த யுஸ்ரா இப்போது ஒலிம்பிக்கில் நீச்சல் போட இருக்கிறார்.

கிமியா அலிசெத் ரியோ ஒலிம்பிக்கில் ஈரான் சார்பில் பங்கேற்று அந்த நாட்டிற்கு வெண்கலம் வென்று கொடுத்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர். கலாசாரம் என்ற பெயரில் பிற்போக்குத்தனமாக கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் ஈரானிலிருந்து வெளியேறி அகதியாக ஜெர்மெனியில் குடியேறி இப்போது தேக்வாண்டோவில் பங்கேற்றிருந்தார்.

கிமியா அலிசெத்

கிமியா அலிசெத்
Olympics

இப்படி அகதிகள் அணியின் சார்பில் பங்கேற்கும் 29 பேரின் பின்னாலும் பல வலிகள் ஒளிந்திருக்கிறது. பல நாடுகளினாலும் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். பல நாடுகளில் இரண்டாம் தர குடிக்களாக நடத்தப்பட்டிருக்கின்றனர். எல்லாவற்றுக்கு அங்கீகாரமே அற்ற ‘அகதிகள்’ எனும் அடையாளம். ஆனால், இன்றைக்கு அப்படியில்லை உலக அரங்கில் தங்களை விரட்டியடித்தவர்களுடன் விடாப்பிடியாக சண்டையிட்டு தங்களுக்கான அடையாளத்தை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றனர். 

ஒலிம்பிக்கை தொடர்ந்து நடைபெறும் பாரா ஒலிம்பிக்கிலும் முதல் முறையாக அகதிகளுக்கான அணி பங்கேற்க இருக்கிறது.

அகதிகளால் பொருளாதார அளவில் முன்னேறிய நாடுகளே அதிகம் இருக்கின்றன. ஆனால், அதை நிறைய நாடுகள் உணர்ந்திருக்கவில்லை. பிரான்ஸ் போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே அவர்களுக்கான கண்ணியத்தை உறுதி செய்கின்றன. 20 ஆண்டுகளுக்கு பிறகு 2018-ல் கால்பந்து உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் க்ரீஸ்மேன், எம்பாப்பே, போக்பா, உம்டிட்டி, ஜிடேன் என அகதிகளின் குடும்பத்தை சேர்ந்தவர்களே அதிகம் இருந்தனர். டென்மார்க்கின் பெண்கள் கால்பந்து அணியை தூக்கி நிறுத்தியிருக்கும் நாதியா நதீம் ஒரு ஆப்கானிய அகதி. அகதிகளே அந்த நாட்டின் பெருமையாக உயர்ந்திருக்கின்றனர்.

அகதிகளினால் அதிக பயன்களை அடையும் நாடுகள் அவர்களுக்கு கைமாறாக கொஞ்சமேனும் கண்ணியத்தையும் அங்கீகாரத்தையும் கொடுங்கள். ஒலிம்பிக் கொடுத்திருப்பதை போல!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *